ஒரு முறை இப்படி பிஸ்கட் ஜாமுன் செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
15 மேரி கோல்ட் பிஸ்கட்
அரை கப் சூடான பால்
கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள்
ஒரு சிட்டிகை ஆப்ப சோடா
1 கப் சர்க்கரை
1 கப் தண்ணீர்
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 15 பிஸ்கட்டை சேர்த்து பாலை சேர்க்கவும். நன்றாக காய்ச்சிய பாலை சேர்த்துக் கொள்ளவும். தொடர்ந்து இதை நன்றாக கிளர வேண்டும். இதில் நாம் ஒரு சிட்டிகை ஆப்ப சோடா, ஏலக்காய் பொடி சேர்த்து கிளரவும். இது நன்றாக மாவு போல் சேர்ந்து வரும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். தொடர்ந்து இந்த பிஸ்கட் மாவை சிறிய உருண்டைகளாக மாற்றி, அதை எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். இதை ஜீராவில் சேர்க்கவும். சுவையான பிஸ்கட் ஜாமின் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“