கசப்பே இல்லாத பாகற்காய் குழம்பு இப்படி செய்யுங்க : செம்ம ருசியா இருக்கும்

பாகற்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க. உடலுக்கு மிகவும் நல்லது. சுவையும் நன்றாக இருக்கும்.

பாகற்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க. உடலுக்கு மிகவும் நல்லது. சுவையும் நன்றாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
sagva

பாகற்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க. உடலுக்கு மிகவும் நல்லது. சுவையும் நன்றாக இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் - 4 டீ ஸ்பூன், பாகற்காய் - 300 கிராம், கடுகு - 1/2 டீ ஸ்பூன், வெந்தயம் - 1/2 டீ ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 டீ ஸ்பூன், சீரகம் - 1/2 டீ ஸ்பூன், மிளகு - 1/4 டீ ஸ்பூன், பூண்டு - 4, வெங்காயம் - 1, கறிவேப்பிலை - 1 கொத்து, தக்காளி - 2, தனியா பொடி - 1 டீ ஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன், மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லிசிறிதளவு.

 செய்முறை: பாகற்காய் குழம்பு செய்முறை : வானலியில் எண்ணெய் விட்டு வட்டமாக நறுக்கிய பாகற்காய்களை போட்டு சிவக்க வதக்கி எடுங்கள். பிறகு அதே எண்ணெயில் கடுகு , வெந்தயம், சீரகம், மிளகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

 தக்காளியில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின் அனைத்து பொடிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்ததாக புளிக்கரைசல் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.

Advertisment
Advertisements

 பின்னர் தட்டு போட்டு மூடி 2 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் பாகற்காய்களை சேர்த்து கிளறுங்கள். பின் மீண்டும் தட்டுபோட்டு மூடி பதம் வரும் வரை கொதிக்க விடுங்கள். குழம்பு பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவுங்கள். பாகற்காய் குழம்பு ரெடி.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: