ஒரு முறை, பாகற்காய் வறுவல், இப்படி செய்து பாருங்க செம்ம ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் 2
2 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் மல்லித் தூள்
1 டீஸ்பூன் கரம் மசாலா
கால் டீஸ்பூன் சோம்பு தூள்
2 டேபிள் ஸ்பூன் தயிர்
3 ஸ்பூன் எண்ணெய்
கடுகு
1 கொத்து கருவேப்பிலை
செய்முறை : பாகற்காயை, நீளமாக நறுக்க வேண்டும். விதைகளை நீக்கி கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சோம்பு பொடி, தயிர் சேர்த்து கிளரவும். இதில் பாகற்காய்யை சேர்த்து முக்கி எடுக்கவும். தொடர்ந்து எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து இதில் பாகற்காய்யை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“