பாகற்காய் அல்லது கரேலா ஜூஸ் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுமா…? என்ற கேள்விக்கு கரேலா ஜுஸ் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி கூறுகிறார்.
பொதுவாக கரேலா (அ) பாகற்காய் மிகவும் சத்து மிக்கவை என்கிற கருத்து மக்களிடையே பரவலாக உள்ளது. இவை நாள்பட்ட நிலையில் உள்ள நீரிழிவு நோய் மற்றும் வேறு சில உபாதைகளிலிருந்து காக்கிறது.
ஆனால், இது எந்தளவுக்கு உண்மை?
எப்பொழுதும் கசப்பாக ஏதேனும் சுவைப்பது என்பது நாக்கின் ருசி மட்டுமல்லாது நரம்பு சார்ந்த உபாதைகளுக்கும் தீர்வு தரும். இவற்றை சுவைப்பதற்கு ஒரு தைரியம் தேவை. இருப்பினும், இதை சுவைத்தால் இரத்த சர்க்கரை அளவினை சமமாக வைத்திருக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி கூறுகிறார்.
இதிலுள்ள சில கூறுகள் நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுவதோடு GLP1 என்கிற ஹார்மோனை இரத்த ஓட்டத்தில் சுரக்கவும் உதவுகிறது என்று டாக்டர் ஜெஃப்ரி பிலன்ட் ஆய்வில் குறிப்பிட்டுள்ளதாக கூறுகிறார்.
நாம் உண்ணும் உணவிற்கும் அதை எவ்வாறு உணர்கிறோம் என்பதே நாம் உட்கொள்ளும் உணவின் நலனைக் குறிக்கும். மாத்திரையை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக சரியான உணவினை எடுத்துக் கொள்வது சிறந்தது.
பாகற்காய் ஜூஸ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
1/2 பாகற்காய் தோலுடன்.
2 நெல்லிக்காய் வெட்டப்பட்டது.
அரை அங்குலம் இஞ்சி
150 மி.லி தண்ணீர்
1 எலுமிச்சை
ஒரு சிட்டிகை இமாலய உப்பு
செய்முறை:
*அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து கலக்குங்கள்.
எப்படி பருக வேண்டும்
அதை ஒரு கல்பில் குடித்துவிட வேண்டும். மெதுவாகவோ ஒவ்வொரு மிடறாகவோ குடிப்பது என்பது சாத்தியமில்லை.
பலர் பச்சை பாகற்காய் சாறு சாப்பிட விரும்புவதைப் பகிரும்போது, இந்த புதிய செய்முறை உண்ணக்கூடியது என்பதால் முயற்சி செய்து பாருங்கள்.
“உங்களுக்கு நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலை இருந்தால் இந்த வழியில் தொடங்குங்கள். பின்னர் படிப்படியாக நீங்கள் மற்ற பொருட்களை நீக்க ஆரம்பிக்கலாம் என்று ராஷி சௌத்ரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“