கசக்குதா? அப்போ அதுதாங்க ஒர்த்! – இரத்த சர்க்கரையை சீராக்கும் பாகற்காய்
சிறியவர் முதல் பெரியவர் வரை பாகற்காயை விரும்பி உண்பதில்லை. ஏனெனில் அதில் கசப்பு சுவை மிகுதியாக உள்ளது. ஆனால் இந்த கசப்பு சுவை உடலுக்கு மிகவும் நல்லது. இவை குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. பாகற்காய், சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து…
Bitter gourd uses – இரத்த சர்க்கரையை சீராக்கும் பாகற்காய், பாவக்காய் பயன்கள்
சிறியவர் முதல் பெரியவர் வரை பாகற்காயை விரும்பி உண்பதில்லை. ஏனெனில் அதில் கசப்பு சுவை மிகுதியாக உள்ளது. ஆனால் இந்த கசப்பு சுவை உடலுக்கு மிகவும் நல்லது. இவை குடலை சுத்தம் செய்ய உதவுகிறது.
பாகற்காய், சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் உடல் எடை கூட குறையும். பாகற்காயில், பொட்டாஷியம், கார்போஹைட்ரேட், புரதம் ஆகியவை நிறைந்திருக்கிறது. அத்துடன் 34 கலோரிகளும் உள்ளன.
மேலும் பாகற்காயில் உள்ள பாலிபெப்டிக் –பி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராக வைத்துள்ளது. பொட்டாஷியம் நிறைந்திருப்பதால் உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைக்கிறது.
பாகற்காயில் பகொழுப்பு, கலோரி, கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க உகந்தது. பாகற்காயில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
பாகற்காயுடன் இஞ்சி, வெந்தயம், சோம்பு சேர்த்து கடுகு எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.