சர்க்கரை வியாதி தேசிய வியாதி என்று சொல்லும் அளவுக்கு பலருக்கும் சர்க்கரை வியாதி இருக்கிறது. பலரும் தங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்குமோ என்று ஐயத்துடனும் அச்சத்துடனும் இருக்கின்றனர். அதனால், சர்க்கரை நோயைத் தடுக்க இந்த இரண்டு சுவை முக்கியம் என்று டாக்டர் யோக வித்யா டிப்ஸ்களைக் கூறியுள்ளார்.
“பொதுவாக ஒருவருக்கு சக்கரை வியாதி வரக்கூடாது என்றால் இந்த மூன்று விஷயங்கள் செய்தால் போதும் சர்க்கரை வியாதி வராது” என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார்.
பொதுவாக யாருக்காவது சர்க்கரை வியாதி வந்துவிட்டால் உடனே நமக்கும் சர்க்கரை வியாதி வந்து விடுமோ என்ற அச்சம் இருக்கலாம். நெருங்கிய ரத்த உறவினர்கள் பாட்டியோ, தாத்தாவோ அல்லது அண்ணனோ சக்கரை வியாதி இருப்பதாக பரிசோதனை செய்து வந்திருப்பார்கள். அதனால், நமக்கும் சர்க்கரை வியாதி வந்துவிடுமோ என்ற பயம் இருக்கும். அதனால், சர்க்கரை வியாதி வராமல் எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது என்று யோசிப்போம், சர்க்கரை வியாதி வந்துவிட்டால் இதிலிருந்து நாம் எப்படி வெளியே வருவது? வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா என்ற கேள்விகள் இருக்கும், அந்த மாதிரி இருப்பவர்கள் எல்லாரும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் அறுசுவைகளில் கசப்பையும் துவர்ப்பையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்று டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.
நம்முடைய உணவுகளில் சுவையும் சமநிலையில் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஏனென்றால் இந்த அறுசுவையும் பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம் ஆகியவற்றை குறிக்கும். இந்த ஐந்து கூறுகளும் நம்முடைய உடலில் சமநிலையில் இருந்தால் மட்டுமே வாதம், பித்தம், கபம் நாடிகள் சமநிலையில் இருக்கும். அதனால், நம்முடைய உணவில் கசப்பும் துவர்ப்பையும் சேர்க்க வேண்டும் என்று டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.
மேலும், சர்க்கரை வியாதி வந்த பிறகு நாவல் கசாயம் குடிக்கிறார்கள், வெந்தயம் சேர்த்துக் கொள்கிறார்கள், மாதுளை பழம் சாப்பிடுகிறார்கள். சர்க்கரையை கட்டுப்படுத்த தேடித்தேடி துவர்ப்பாக என்ன இருக்கிறதோ அதை எல்லாம் சாப்பிடுகிறார்கள். அதனால், ஆரம்பத்திலிருந்து நாம் துவர்ப்பு சுவை உள்ள உணவுகளை சாப்பிட்டால் நம்முடைய இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த மூன்று விஷயங்களை மட்டுமே செய்தால் நமக்கு சர்க்கரை வியாதி வராது என்கிற அளவுக்கு இதை கடைப்பிடியுங்கள் என்று டாக்டர் யோக வித்யா கூறுகிறார்.