Healthy Food Recipe : நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மிக முக்கியமானது. அதனால் தான் சர்க்கரை மற்றும் வறுத்த உணவுகளை குறைத்து ஆரோக்கியமான மாற்று உணவுகளை சாப்பிட்ட நீங்கள் ஊக்குவிக்கப்படுகிறீர்கள். குறிப்பாக தேவையற்ற ஏக்கங்களைத் தணிக்க, சத்தான உணவை சாப்பிட வேண்டும். எனவே, உங்கள் ஸ்நாக்ஸ் நேரத்தை ஆரோக்கியமாக மாற்ற வேண்டும் என நினைத்தால் அதற்காகவே இருக்கிறது கறுப்பு கொண்டைக் கடலை சாலட்.
கிளாஸியான லுக்: பிரபலங்களின் பிளாக் அண்ட் ஒயிட் சேலஞ்ச் படத் தொகுப்பு!
தேவையானப் பொருட்கள்
ஒரு கப் வேகவைத்த கறுப்பு சுண்டல்
ஆலிவ் எண்ணெய்
1 டீஸ்பூன் - எலுமிச்சை சாறு
1 தேக்கரண்டி - சீரக தூள்
1 தேக்கரண்டி - சீரகம்
நறுக்கிய வெள்ளரிகள்
நறுக்கிய தக்காளி
நறுக்கிய வெங்காயம்
நறுக்கிய குடை மிளகாய்
நறுக்கிய பச்சை மிளகாய்
நலிந்த இசைக் கலைஞர்களுக்கு உதவி: ஒன்று கூடிய பாடகர்கள்!
செய்முறை
ஒரு கப் கறுப்பு கொண்டைக் கடலையை வேகவைத்து தனியே வைக்கவும். ஒரு வாணலியில், சிறிது ஆலிவ் எண்ணெய் மற்றும் ½ டீஸ்பூன் சீரகத்தை சேர்க்கவும்.
வாணலியில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் வேகவைத்த சுண்டலை சேர்க்கவும். சுவைக்கேற்ப உப்பு மற்றும் சீரகத்தூளை சேர்க்கவும்.
இந்த நேரத்தில் குடை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்க்கவும். இதை நன்றாக வதக்கி, குறைந்த வெப்பத்தில் சுமார் 8-10 நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
பின்னர் வெப்பத்தை குறைத்து சிறிது எலுமிச்சை சாற்றை அதில் தூவவும். தேவைப்பட்டால் சிறிது சாட் மசாலாவை சேர்த்து சாப்பிட்டு மகிழவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”