கருப்பு எள்... முருங்கை இலை... பேரிச்சை..! இரும்புச் சத்து கிடைக்க எப்படி சாப்பிடணும் தெரியுமா?

இந்தியாவில் 15 முதல்  19 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 56 சதவீதம் பேரும், 30 சதவீத சிறுவர்களும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவில் 15 முதல்  19 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 56 சதவீதம் பேரும், 30 சதவீத சிறுவர்களும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Black sesame seeds Dates and raisins Beetroots and carrots Wheatgrass Moringa leaves to incress your iron levels - கருப்பு எள்... முருங்கை இலை... பேரிச்சை..! இரும்புச் சத்து கிடைக்க எப்படி சாப்பிடணும் தெரியுமா?
இரத்தத்தில் குறைந்த அளவில் காணப்படும்  ஹீமோகுளோபின் ஒருவரை பலவீனமாக உணர வைக்கும்.  அதோடு  இரும்புச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. இது நீண்ட காலத்திற்கு பல சுகாதார பிரச்சினைகளுக்கு மூல காரணமாக அமைகின்றது.  மற்றும் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு காரணமாக மாறுகிறது.
Advertisment
இதை தான்  உலக சுகாதார அமைப்பு, “இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சிலருக்கு குறைந்து காணப்படுவதால் அவர்களின்  உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய  இல்லாமல் போய்விடுகின்றது. இது அவர்களின் வயது, பாலினம், உயரம், புகைத்தல் மற்றும் கர்ப்ப நிலை ஆகியவற்றை பொறுத்தே அமைகின்றது"என்கிறது.

யுனிசெப் (UNICEF) கூறுவது போல், உலகிலே இந்தியாவில் தான்  அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் உள்ளனர்.  அவர்களில்  10 முதல் 19 வயதுடையவர்களின் எண்ணிக்கை, 1.2 பில்லியனில் 243 மில்லியன்.  இது  இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் 15 முதல்  19 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 56 சதவீதம் பேரும், 30 சதவீத சிறுவர்களும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   ஹீமோகுளோபின் அளவு குறைந்து காணப்படும் நாடாக இந்தியாவை குறிப்பிட்டு சொல்ல  இந்த புள்ளி விபரங்களே போதுமானதாக உள்ளது

டாக்டர் டிக்சா பாவ்சர்  ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும் சில எளிய வீட்டு மருத்துவத்தை இங்கே பரிந்துரைத்துள்ளார்.

Advertisment
Advertisements

 

கருப்பு எள்

இதில்  இரும்பு, தாமிரம், துத்தநாகம், செலினியம் மற்றும் வைட்டமின் பி 6, ஈ மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

எப்படி தயார் செய்வது:

1 தேக்கரண்டி உலர்ந்த கருப்பு எள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நன்றாக வறுக்கவும். பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் நெய்யுடன் கலந்து  சிறு சிறு உருண்டைக்ளாக பிடிக்கவும். அதன் பிறகு நன்றாகஉலர வைக்கவும். இப்போது அதை நீங்கள் உண்ணலாம். இது உங்கள் உடலில் இரும்புச்  சத்தை அதிகரிக்க உதவுகின்றது.

பேரீட்சை  மற்றும் திராட்சை

இந்த உலர்ந்த பழ கலவையானது இரும்பு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

எப்படி உட்க்கொள்வது:

2-3 பேரீட்சைகளும்,  ஒரு பிடி  திராட்சையும்  சிற்றுண்டியாக  காலை உணவுக்கு முன்னர் எடுத்துக் கொண்டால் உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு இரும்புச்  சத்தை  அதிகரிக்கின்றது.

பீட்ரூட் மற்றும் கேரட்

 

publive-image

 

இது  வைட்டமின் சி- யை  உள்ளடக்கியுள்ளது.

எப்படி தயார் செய்வது:

ஒரு கப் நறுக்கிய பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து, நன்கு கலந்து, சாற்றை வடிகட்டி, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து

நன்றாக சாறு போன்று வைத்து கொள்ள வேண்டும். இதை தினமும்  காலையில் தவறாமல் குடித்து வந்தால் இரும்புச்  சத்தை  அதிகரிக்கும்.

வீட் கிராஸ்

இது பீட்டா கரோட்டின், வைட்டமின் கே, ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்பு, புரதம் மற்றும் ஃபைபர் வைட்டமின் சி, பி வைட்டமின்கள் போன்ற பல மூலப் பொருள்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது.  மேலும் இரத்தத்தை உற்பத்தி செய்யும் காரணிகளையும் கொண்டுள்ளது.

எப்படி உட்க்கொள்வது:

தினமும் ஒரு டீஸ்பூன் காலையில் வெறும் வயிற்றில்  உட்கொள்வது உங்கள் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது  மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

முருங்கை இலை:

 

publive-image

 

முருங்கை இலையில்  ஏராளமான இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன.

எப்படி உட்க்கொள்வது:

முருங்கை இலையை  தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 1தேக்கரண்டி முருங்கை இலை  தூளோடு தண்ணீர் கலந்து  தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் குடல் சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் எழாது. அதோடு உடலில் இரும்புச் சத்தின் அளவை  அதிகரிக்கவும்  உதவுகின்றது.

 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Lifestyle Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: