ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதம் ரத்த புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இது லுகேமியா, லிம்போமா மற்றும் மைலோமா (leukemia, lymphoma, myeloma) போன்ற ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கிறது.
ரத்த புற்றுநோய் - ஹீமாடோலாஜிக் புற்றுநோய் (hematologic cancer) என்றும் அழைக்கப்படுகிறது - இது ரத்தம், எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் மண்டலத்தை பாதிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கிறது.
பல ஆய்வுகளின்படி, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக, ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
தோராயமாக ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும், அமெரிக்காவில் ஒருவருக்கு லுகேமியா, லிம்போமா மற்றும் மைலோமா இருப்பது கண்டறியப்படுகிறது என்று, லுகேமியா மற்றும் லிம்போமா சொசைட்டி கூறுகிறது.
எனவே, இந்த கொடிய நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்காணிப்பது மிகவும் முக்கியமானது. அதற்கு முன், இந்த வகை புற்றுநோய்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வோம்.
டாக்டர் சூரஜ் டி சிரானியா (clinical haematologist, hemato-oncologist, and BMT physician இவை பொதுவாக மரபணு மாற்றங்கள், சில ரசாயனங்கள் அல்லது கதிர்வீச்சுக்கு வெளிப்பாடு மற்றும் குடும்ப வரலாறு போன்ற காரணங்களால் ஏற்படுகின்றன என்று விளக்கினார்.
இந்த நிலை முக்கியமாக குறிப்பிட்ட ரத்த அணுக்களின் அசாதாரண வளர்ச்சி மற்றும் அதன் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது. இந்த வளர்ச்சி நோயெதிர்ப்பு மண்டலத்தையும், ரத்தத்தின் இயல்பான செயல்பாட்டையும் பாதிக்கும், என்றார்.
ஆரம்ப அறிகுறிகளைப் பொறுத்தவரை, அவை மாறுபடலாம் என்று டாக்டர் நித்தி ரைசாடா (senior director, medical oncology and hemato-oncology, Fortis Hospitals, Bengaluru) பகிர்ந்து கொண்டார்.
இருப்பினும், சில பொதுவான அறிகுறிகளில் சோர்வு, வெளிரிய தோல், விவரிக்க முடியாத எடை இழப்பு, அடிக்கடி தொற்றுகள், வீங்கிய நிணநீர் கணுக்கள், எளிதில் காயம், ரத்தப்போக்கு, எலும்பு வலி, காய்ச்சல் மற்றும் இரவில் வியர்த்தல் ஆகியவை அடங்கும்.
இருப்பினும், இந்த அறிகுறிகள் மற்ற சுகாதார நிலைகளாலும் ஏற்படலாம். முன்கூட்டிய நோயறிதல் மற்றும் சிகிச்சையானது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவலாம், என்று டாக்டர் ரைசாடா கூறினார்.
வயது, ரத்த புற்றுநோயின் குடும்ப வரலாறு, பென்சீன் போன்ற ரசாயனங்களின் வெளிப்பாடு, அதிக கதிர்வீச்சு வெளிப்பாடு மற்றும் MDS (Myelodysplastic Syndrome) போன்ற குறிப்பிட்ட மருத்துவ நிலைமைகள் ரத்த புற்றுநோய்க்கான பொதுவான ஆபத்து காரணிகள் ஆகும்.
புற்றுநோயியல் நிபுணர்களின் கூற்றுப்படி, ரத்தப் புற்றுநோயைத் தடுப்பது எப்போதும் ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருக்காது, குறிப்பாக மரபணு காரணிகள் அல்லது குறிப்பிடத்தக்க ஆபத்து காரணிகள் சம்பந்தப்பட்டிருக்கும் போது, தனிநபர்கள் தங்கள் ஆபத்தைக் குறைக்க எடுக்கக்கூடிய முன்முயற்சிகள் உள்ளன.
டாக்டர் ரைசாடா அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார்:
பென்சீன் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களுக்கு வெளிப்படுவதைக் குறைக்கவும்.
கதிர்வீச்சு வெளிப்பாடு சம்பந்தப்பட்ட தொழில்களில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்கவும்.
புகைபிடித்தல் மற்றும் அதிக மது அருந்துவதை தவிர்க்கவும்.
ரத்த புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்கள், அவர்களின் ஆபத்து மற்றும் சாத்தியமான தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ள மரபணு ஆலோசனையைப் பெறவும்.
Read in English: Blood Cancer Awareness Month 2023: Early signs and symptoms you must watch out for
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“