உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் என்னென்ன ?

இரத்த அழுத்தமானது குறைவதோடு, அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

இரத்த அழுத்தமானது குறைவதோடு, அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Blood Pressure Control Diet

Blood Pressure Control Diet

Shanthini U.R. 

Blood Pressure Control Diet : நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை திசுக்களில் சேர்ப்பதும் திசுக்கள் உருவாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதும் இரத்ததின் மூலம் தான் நடைபெறுகிறது. எனவே இரத்தம் என்பது நம் உடலில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் பாய்ந்து செல்கிறது.

Advertisment

இதனையே நாம் இரத்த ஓட்டம் என்று குறிப்பிடுகிறோம். ஆகையால் இரத்தம் நம் உடல் முழுவதற்கும் பரவுவதற்கு ஒரு விதமான அழுத்தம் இரத்தத்தால் செலுத்தப்படுகிறது.

இவ்வாறு தமனிகளில் செல்லும் இரத்த ஓட்டத்தில் செயல்படுத்தப்படும் அழுத்தம் இதயத் துடிப்பில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுவே இரத்த அழுத்தம் (Blood Pressure) எனப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) அல்லது இரத்தக் கொதிப்பு (Hypertension) என்பது நம் இரத்த அழுத்தம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் அளவினை விட அதிகமாக இருப்பதே ஆகும்.  மேலும் உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு (Heart Attack) மற்றும் வாதம் (பக்க‌ வாதம்) ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகப் படுத்துகிறது.

Advertisment
Advertisements

எண்ணெய் பதார்த்தங்கள், பாலாடைக் கட்டி, வெண்ணெய், நெய், டால்டா, பாமாயில், வறுத்த உணவு வகைகள், வறுவல்கள், கோழி, மாமிச உணவுகள், ஊறுகாய், அப்பளம் மற்றும் சாஸ் வகைகள் மேலும் சாக்லேட் போன்ற இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம், கேக், குளிர்பானங்கள் போன்ற உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

1.பழங்கள் சாப்பிடுங்கள்

பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினமும் பால் சாப்பிடுங்கள். இதில் கால்சியம் உள்ளது, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, ஓட்ஸ், இளநீர் மற்றும் மீன் உணவுகளில் பொட்டாசியம், மெக்னீசியம் சத்துகள் உள்ளதால் இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2.சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகள் இந்த விதைகளில் ஒமேகா 6 கொழுப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் வைட்டமின் ஈ, பி காம்ப்ளெக்ஸ் போன்றவையும் அதிகமாக உள்ளன. ஒரு சில சூரியகாந்தி விதைகளை உண்டால் அது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.மற்றும் உங்கள் இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

3. கேரட் சாறு

கேரடில் அதிகமாக பொட்டாசியம் மற்றும் 'B' குரூப் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். கேரட் சாறு இதய மற்றும் சிறுநீரக செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சாதாரண ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

4.  ஆரஞ்சு

ஹெஸ்பெரிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, ஆரஞ்சுப் பழத்தில் நிறைந்திருப்பதால், அதனை தினமும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது குறைவதோடு, அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.

மேலும் படிக்க : உடல் எடையைக் குறைக்கும் ஆரோக்கியமான டையட் முறை!

Healthy Life Food Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: