உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும், இது ஒருவரின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை அமைதியாக பாதிக்கலாம், மேலும் இதில் நெருங்கிய உறவுகளும் அடங்கும். இதய ஆரோக்கியத்திற்கு அது ஏற்படுத்தும் ஆபத்தை பலரும் அறிந்திருந்தாலும், அது பாலியல் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பலரும் அறிந்ததில்லை.
எனவே, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, இருப்பினும் இது கவனிக்க வேண்டிய ஒன்றாகும் என மருத்துவர் கூறுகிறார்.
பாலியல் ஆரோக்கியத்தில் தாக்கம்
உயர் இரத்த அழுத்தம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் செயல்திறன் மற்றும் ஆசை மீது விளைவை ஏற்படுத்தும் என்று ரீகல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் சிறுநீரக நிபுணர் மருத்துவர் சூரி ராஜு கூறுகிறார்.
ஆண்களில், உயர் இரத்த அழுத்தம் விறைப்புச் செயலிழப்புக்கு (ED) வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். "அடிப்படையான பிரச்சினை என்னவென்றால், உயர் இரத்த அழுத்தம் எண்டோடெலியத்தை அல்லது இரத்த நாளங்களின் inner lining-ஐ சேதப்படுத்துகிறது, அவை சரியாக விரிவடையும் திறனைக் குறைக்கிறது. இதன் விளைவாக ஆண் உறுப்புக்கு இரத்த ஓட்டம் தடைபடுகிறது, இதனால் விறைப்புத்தன்மை அடைவதை கடினமாக்குகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Is your blood pressure high? It may be affecting your sex life
பெண்களுக்கு, இதே அளவிலான விளைவுகளை ஏற்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்தம் பிறப்புறுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கலாம், இது பாலியல் தூண்டுதல் குறைவதற்கு வழிவகுக்கும். உச்சம் அடைவதில் சிரமம் ஏற்படலாம் என மருத்துவர் கூறுகிறார்.
தற்போதைய உயர் இரத்த அழுத்தம் பற்றிய ஆராய்ச்சியில், உயர் இரத்த அழுத்தம் உள்ள ஆண்களில் 68% பேருக்கு சிலருக்கு விறைப்புத்தன்மை பாதிப்பு உள்ளதாக கூறியுள்ளது. மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு பாலியல் தூண்டுதல் ஏற்படுவதில் பாதிப்புகள் ஏற்பட 40% வாய்ப்புள்ளதாக டாக்டர் ராஜு குறிப்பிடுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“