ஒரு முறை வெங்கடேஷ் பட் சொல்வது போல் பாம்பே அல்வா செய்து பாருங்க. வெறும் 50 ரூபாயில் இந்த அல்வா செய்ய தேவையான எல்லா பொருட்களையும் நாம் வாங்கிட முடியும்.
தேவையான பொருட்கள்
250 கிராம் கான்பிளவர்
500 எம்.எல் தண்ணீர்
4 ஸ்பூன் நெய்
500 கிராம் சர்க்கரை
2 சிட்டிகை ஏலக்காய் தூள்
1 சிட்டிகை உப்பு
50 கிராம் முந்திரி பருப்பு
சில சொட்டுக்கள் சிவப்பு புட் கலர்
6 பாதாம் நறுக்கியது
கால் கப் நெய்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கான்பிளவர் , தண்ணீர் சேர்த்து கரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் சேர்த்து கான் பிளவர் கலவையை சேர்க்கவும். தொடர்ந்து அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி, உப்பு, புட் கலர் சேர்த்து கிளரவும். நாம் இந்த கலவையை தொடர்ந்து கிளரி கொண்டே இருக்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நெய் சேர்க்கவும் . 25 நிமிடங்கள் கழித்து, முந்திரி சேர்த்து கிளரவும். தொடர்ந்து நெய் சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, அதில் பாதாம் நறுகியத்தை தூவி, அதன் மீது அல்வாவை பரப்பவும். அரை மணி நேரம் கழித்து அதை தேவையான அளவில் வெட்டி எடுக்கலாம்.