2025 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதியான போகியில் இருந்து பொங்கல் விழா தொடங்குகிறது. எல்லோரும் தேவையில்லாத பொருட்களை எரித்து முதல் நாள் கொண்டாடப்படுவதே போகியாகும்.
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் 2025 பொங்கல் பண்டிகை என்பது அறுவடை திருநாள், தமிழர் திருநாள் மட்டுமல்ல, இறை வழிபாடு, குலதெய்வ வழிபாடு என்பதையும் தாண்டி நன்றி சொல்லும் ஒரு திருநாளாகும்.
போகி பண்டிகை என்பது பொங்கலுக்கு முந்திய நாள், அதாவது மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். போகியன்று பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.
அதாவது பழையன ஒழிந்து புதியவை வருவது தான் போகியாகும். இந்நாள் கடவுளான இந்திரனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை நாளில் மக்கள் தங்களது வீட்டில் தோரணங்கள் கட்டுவது, வீட்டின் முன் அழகிய கோலங்கள் போடுவது போன்றவற்றையும் பின்பற்றுவது வழக்கம்.
இப்படி போகியன்று கடைபிடிக்க வேண்டிய மேலும் சில முக்கியமானதை பற்றி அனிதா குப்புசாமி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
2025 போகிப் பொங்கல் | போகிப் பொங்கல் அன்று என்ன செய்ய வேண்டும்? | Bhogi Pongal 2025 |AnithaKuppusamy
போகி அன்று மாலை நேரத்தில் நம் வீட்டு தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். நம் குடும்பத்தில் குல தெய்வம் அல்லது நமக்கு இஷ்டமான தெய்வத்தை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். இந்த பூஜையை மாலை 6 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். வாழை இலையில் சாதம், வெல்லம், வாழைப்பழம் போன்ற பொருட்களை படையலாக வைத்து இந்த பூஜையை செய்ய வேண்டும்.
போகி பண்டிகை அன்று குலதெய்வ வழிபாடு மிகவும் விசேஷமான ஒன்றாகும். எந்த தெய்வத்தை வழிபடவில்லை என்றாலும் குலதெய்வ வழிபாடு பலன் தரும். குலதெய்வம் யார் என்று தெரியாதவர்கள் சிவன், முருகனை வழிபடலாம். மாலை 6 மணிக்கு பொங்கல் வைத்து வழிபடலாம்.