போண்டா ரெசிபி… ஆனியன், உருளைக்கிழங்கு ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு!

வீட்டிலேயே ரொம்ப சுலபமா செய்யக்கூடிய வெங்காய போண்டா.

medu vadai instant medu vadai recipe
medu vadai instant medu vadai recipe

Bonda recipes, bonda recipe in tamil மாலை நேர ஸ்நாக்ஸ் வகைகளில் போண்டா, பஜ்ஜி, வடை என பல ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம், அந்தவகையில் இப்போது வீட்டிலேயே ரொம்ப சுலபமா செய்யக்கூடிய வெங்காய போண்டா.

கடலை மாவு – ஒரு கப் அரிசி மாவு – கால் கப் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 இஞ்சி – ஒரு துண்டு மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன் பெருங்காய்த்தூள் – கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன் கொத்தமல்லி கறிவேப்பிலை எண்ணெய் – பொரிப்பதற்கு உப்பு – தேவையான அளவு

செய்முறை: ஆனியன் போண்டா

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி போண்டா மாவு பதத்துக்கு தயார் செய்யவும். பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்..

உருளைக்கிழங்கு போண்டா

மாவு தயாரிக்க கிண்ணத்தில் மாவு கலக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்துகொள்ளுங்கள்.பின் உருளைக்கிழங்கு மசாலாவை கையில் எண்ணெய் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து போண்டா சுட எண்ணெய் விட்டு காய விடுங்கள்.காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் ஒவ்வொன்றாக போடுங்கள். சில நிமிடங்கள் அப்படியேவிட்டு பின் மறுபுறம் பிரட்டி எடுக்க சுற்றிலும் மாவு வேகும்.

பொன்னிறமாக மாவு வெந்ததும் எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bonda recipes bonda recipe in tamil onion bonda potato bonda making

Next Story
Happy New Year 2021: ஜனவரி 1 அன்று ஏன் புத்தாண்டைக் கொண்டாடுகிறோம்?Happy New Year 2021 History Why New year celebrated in January 1 Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com