நோய் அழற்றி அல்லது வீக்கம் பெரும்பாலும் மலச்சிக்கல், பி.சி.ஓ.எஸ் அல்லது தைராய்டு உள்ளிட்ட குடல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே இதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்வது அவசியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர். சமையலறையில் உள்ள மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்வது சில அதிசயங்களை நிகழ்த்தும் என டாக்டர் டிக்சா பாவ்சர் பரிந்துரைத்துள்ளார்.
முடக்கு வாதம் முதல் ஹாஷிமோடோ வரை நோயெதிர்ப்பு கோளாறுகளுக்கு inflammation முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சமையலறையே முதல் மருந்தகம் . ஒவ்வொரு மசாலா / மூலிகையிலும் நிறைய மருந்துகள் உள்ளன என கூறுகிறார். சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் நோய்த்தொற்றுகளை சிறப்பாக சமாளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருவர் உணவில் தவறாமல் சேர்க்க வேண்டிய 5 மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.
மஞ்சள்
இயற்கையாகவே பலவிதமான நோய்களை குணப்படுத்த மஞ்சள் உபயோகப்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. மஞ்சள் கிருமி நாசினி என்பது மட்டுமின்றி அன்றாட சமையலில் மஞ்சள் சேர்ப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. எந்தவொரு நோய் அல்லது நோயால் ஏற்படும் வீக்கத்திற்கு எதிராக போராட உடலுக்கு உதவுகிறது. உடலின் ஆக்ஸிஜனேற்ற திறனை மஞ்சள் அதிகரிக்கிறது.
கருமிளகு
உங்கள் தொண்டை, நுரையீரல், குடல், தசைகள், மூட்டுகள் மற்றும் எல்லா இடங்களிலும் ஏற்படும் வீக்கத்திற்கு சிறந்தது. இருமல் / சளி, மூட்டு வலி, பசியற்ற தன்மை போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
இஞ்சி
உலர்ந்த இஞ்சி விஸ்வபேசாஜா (உலகளாவிய மருத்துவம்) என்று அழைக்கப்படுகிறது. இஞ்சி இதய நோய் வராமல் தவிர்க்க உதவும். வீக்கம், மூட்டு வலி, மாதவிடாய் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.
கிராம்பு
கிராம்பு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. கிராம்பு குளிர்ச்சியானது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. பல்வலி, தொண்டை வலி, மூட்டு வலி, போன்றவைகளுக்கு கிராம்பு பயனுள்ளதாக இருக்கும்.
வெந்தயம்
மூட்டு வலி, மலச்சிக்கல், வீக்கம், எடை இழப்பு போன்றவற்றுக்கு வெந்தயம் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெந்தயத்தை நீராவிப் பிடித்தலுக்கும் பயன்படுத்தலாம். ஏனெனில் இது சுவாசப் பாதையில் வீக்கத்தைக் குறைத்து, நன்றாக சுவாசிக்க உதவுகிறது.
எப்படி உபயோகிப்பது?
மஞ்சள் + கரு மிளகு
கருமிளகு டீ, சூடான பாலில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். மஞ்சள், மிளகு இரண்டையும் பாலில் கலந்து குடிக்கலாம். இனிப்பு சுவைக்கு தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
இஞ்சி
இதனை இஞ்சி டீ, இஞ்சி சாறு அல்லது தூளாக பயன்படுத்தலாம்.
கிராம்பு
கிராம்பு எண்ணெய் வளமான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காராணமாக சோப்புகள் மற்றும் உடல் லோஷன்களில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு தேநீராகவும் தயாரித்து குடிக்கலாம்.
வெந்தயம்
வெந்தயத்தை தூள் செய்து பாலில் கலந்து குடிக்கலாம். வெந்தய விதையை அரைத்து பொடி செய்து தேநீர் தயாரித்து குடிக்கலாம். சமையலிலும் உபயோகிக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil