கோவை விமான நிலையத்தில் தானியங்கி பூங்கொத்து இயந்திரம் அமைக்கப்பட்டது, பயணிகள் இடையே வரவேற்றபை பெற்றுள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். உறவினர்கள், நண்பர்களை வரவேற்பதில் தொடங்கி தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலதரப்பட்ட மக்களையும் வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்கள் விமான நிலையத்திற்கு வருகின்றனர்.
இந்நிலையில், தினசரி விமான நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, தானியங்கி பூங்கொத்து இயந்திரம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 800 முதல் ரூ. 5,000-க்கும் மேல் பல்வேறு விதமான பூங்கொத்துகள் நிரப்பப்பட்டுள்ளன. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி நமக்கு தேவையான பூங்கொத்தை பெற்றுக் கொள்ளலாம்.
பயணிகளை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், இங்கிருந்தே பூங்கொத்துகளை வாங்கிக் கொள்ளும் இந்த வசதி தற்போது வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தி - பி.ரஹ்மான்