சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை “மில்லினியல்ஸ்களின் மனநிலையினால் தான்” வாகன விற்பனை மந்தநிலையில் உள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும், அரசாங்கம்"பிரச்சனைகளை புரிந்து கொள்கிறது" என்றும் "அதை தீர்க்க" முயற்சித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
(மில்லினியல்ஸ்மில் - 90 களில் பிறந்தவர்கள்)
நிர்மலா சீதாராமன் கூறும் போது, " பி.எஸ் VI நடைமுரைக்கி வரவிருப்பதாலும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாலும்( இந்த உயர்வு ஜூன் 2020 தற்போது அரசு ஒத்திவைத்துள்ளது), ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு சற்று பின்னடைவு என்பதை ஒத்துக் கொள்ளும் அதே நேரத்தில், ஆட்டோமொபைல் மந்தநிலைக்கு வேறுசில காரணங்களும் இருக்கின்ற என்று ஆய்வுகள் சொல்கின்றன.
தற்போதுள்ள 'மில்லினியல்ஸ்கள்' வாகனங்கள் வாங்குவதற்காக ஈ.எம்.ஐ யில் மாட்டிக் கொள்ளாமல், ஓலா,உபெர் மற்றும் மெட்ரோ ரயில்களின் சேவைகளில் பயன்படுத்தவதால் தான் ஆட்டோமொபைல் விற்பத்தி சரிவை சந்திதுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கள் தற்போது வைரலாகி, #BoycottMillennials , #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக்கிலும் , மீம்ஸ்களிலும் பின்னி பிடல் எடுக்கின்றன.
சில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்:
கார்கள் மற்றும் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் மிக மோசமான மாத சரிவைக் கண்டது. பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை கடந்த ஆண்டை கணக்கிடும் போது 31.6 சதவீதம் குறைந்து ஆகஸ்டில் 196,524 உருப்படிகளே விற்றன. 1997-98 க்குப் பிறகு இது மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும்.