திருக்கோவிலூரில் சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலகளந்த பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் விழா இன்று கோலாகமாக தொடங்கியது.
வாமனர் அவதாரத்தை போற்றும் விதமாக இந்தக் கோயில் அமைந்துள்ளது என்று சுற்றுவட்டார பகுதி மக்கள் நம்புகின்றனர். இது மட்டுமின்றி இந்தக் கோயிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இங்கு மிருகண்டு மகரிஷி ஆசிரமத்தில் மூலவர் மக்களுக்கு இன்றும் அருள்பாளித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மார்கண்டனின் தந்தையான மிருகண்ட மகரிஷி திருக்கோவிலூரில் தங்கி ஆசிரமம் கட்டி பெருமாளை நினைத்து தவம் புரிந்ததாகவும், அதன் விளைவாக அவருக்கு பெருமாள் காட்சியளித்ததாகவும் ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், இந்தக் கோயிலில் இன்று பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 14-ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.