Tirupati Brahmotsavam festival special buses: தமிழ்நாடு அரசு, அக்டோபர் 13 முதல் அக்டோபர் 26 வரை பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பக்கோணம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பயணிகள், www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரப்பூர்வ செயலியைப் பார்வையிடுவதன் மூலம் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி பிரமோற்சவம் செப்.18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு ஏழுமலையான் காலை, மாலை 4 மாட வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலிப்பார்.
இந்த நிலையில், அக். 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 23ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“