Advertisment

கடுமையாக அதிகரிக்கும் மூளை பக்கவாதம், அல்சைமர், நீரிழிவு நரம்பு சேதம்- புதிய லான்செட் நியூரோ ஆய்வு

2021 ஆம் ஆண்டில், குறைந்தது 3.4 பில்லியன் மக்கள் நரம்பு மண்டல நிலையை அனுபவித்ததாக ஆய்வு கூறுகிறது.

author-image
WebDesk
New Update
Lancet neuro study

Brain stroke, Alzheimer’s and diabetic nerve damage going up sharply: What a new Lancet neuro study means

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பக்கவாதம், டிமென்ஷியா, அல்சைமர் நோய் மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நரம்பியல் நிலைகளுடன் வாழும் அல்லது இறக்கும் நபர்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் கடுமையாக - 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது, Global Burden of Disease, Injuries and Risk Factors Study (GBD) 2021 இன் புதிய பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது.

Advertisment

தி லான்செட் நரம்பியல் இதழில் (The Lancet Neurology journal) வெளியிடப்பட்ட, இந்த கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கது. ஏனெனில் நரம்பியல் நிலைமைகளின் பாதிப்பு முன்பு நினைத்ததை விட மிக அதிகமாக உள்ளது. மேலும், பக்கவாதம், ஒற்றைத் தலைவலி மற்றும் நீரிழிவு நரம்பியல் ஆகியவை நோய் ஸ்பெக்ட்ரமில் அதிகமாக உள்ளன.

2021 ஆம் ஆண்டில், குறைந்தது 3.4 பில்லியன் மக்கள் நரம்பு மண்டல நிலையை அனுபவித்ததாக ஆய்வு கூறுகிறது.

இயலாமை, நோய் மற்றும் அகால மரணத்தின் ஒட்டுமொத்த அளவு (DALYs)- மூன்று தசாப்தங்களில் நரம்பியல் நிலைமைகளால் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

அவற்றில் முதல் பத்து இடங்களில் பக்கவாதம், நியோனாடல் என்செபலோபதி (மூளைச் செயல்பாட்டின் குறைபாடுள்ள புதிதாகப் பிறந்த குழந்தைகள்), ஒற்றைத் தலைவலி, அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா, நீரிழிவு நரம்பியல் (அதிக ரத்த சர்க்கரையால் ஏற்படும் நரம்பு பாதிப்பு), மூளைக்காய்ச்சல், கால்-கை வலிப்பு, குறைப் பிரசவத்தால் ஏற்படும் நரம்பியல் சிக்கல்கள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு மற்றும் நரம்பு மண்டல புற்றுநோய் ஆகியவை அடங்கும்.

நியோனாடல் என்செபலோபதி, நீரிழிவு நரம்பியல், முன்கூட்டிய பிறப்பு சிக்கல்கள் மற்றும் ஆட்டிசம் ஆகியவை முதல் 10 கவலைக்குரிய நிலைமைகளுக்கு முன்னேறியது இதுவே முதல் முறை.

பதற்றத்தால் தூண்டப்பட்ட தலைவலி (சுமார் இரண்டு பில்லியன் பாதிப்புகள்) மற்றும் ஒற்றைத் தலைவலி (சுமார் 1.1 பில்லியன் பாதிப்புகள்), ஆகியவை  2021 இல் மிகவும் பொதுவான நரம்பியல் கோளாறுகள் ஆகும்.

இந்தியாவில், DALY மற்றும் இறப்பு விகிதம் 5,000க்கும் அதிகமாகவும், 2021 இல் 100,000 பேருக்கு 113 ஆகவும் இருந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆய்வு என்ன சொல்கிறது?         

இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் (Public Health Foundation of India) புகழ்பெற்ற கெளரவப் பேராசிரியர் கே ஸ்ரீநாத் ரெட்டி, (தற்போதைய ஆய்வுடன் இணைக்கப்படமால்) இந்தியர்கள் நீரிழிவு நரம்பியல் மற்றும் பக்கவாதம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார்.

நீரிழிவு நோய் பரவலின் அதிகரிப்புக்கு ஏற்ப, நீரிழிவு நரம்பியல் (diabetic neuropathy) 1990 ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதில் இந்தியா ஒரு முக்கிய இடத்தில் உள்ளது.

"ஏற்கனவே நீரிழிவு நோயின் பெரும் சுமையுடன், இந்தியாவுக்கு ஒரு முதன்மை சுகாதார அமைப்பு தேவைப்படுகிறது, இது டைப் 2 நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறிவது மட்டுமின்றி, சிகிச்சை அளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துகிறது. நரம்பு சேதத்தை மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்கிறார் டாக்டர் ரெட்டி.

இந்தியாவில் பக்கவாதம் குறித்த குறிப்பிட்ட தரவுகளை இந்த ஆய்வு பட்டியலிடவில்லை என்றாலும், இறப்பு மற்றும் இயலாமைக்கு அவையே முக்கிய காரணம் என்று டாக்டர் ரெட்டி கூறுகிறார்.

இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளில் பக்கவாதத்தின் பாதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தற்போது நான்கில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சமீபத்தில் அறிவியல் அறிக்கைகளில் ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் பெண்களுக்கு ஐந்தில் ஒருவருக்கும் ஆண்களுக்கு ஆறில் ஒருவருக்கும பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஆய்வு ஆபத்து காரணிகளைப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. உயர் இரத்த அழுத்தம் போதுமான அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் முன்கூட்டியே கண்டறியப்பட வேண்டும். நீரிழிவு நோய், காற்று மாசுபாடு, புகைபிடித்தல், காலநிலை மாற்றத்தின் வெப்ப விளைவுகள் மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிலைமைகளும் தூண்டுதலாக உள்ளன, என்கிறார் ரெட்டி.

பெரும்பாலும் பக்கவாதம் எச்சரிக்கை அறிகுறிகளுக்கு முந்தையதாக இருக்கும் (transient ischaemic attacks). இந்த நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், பெரிய பக்கவாதம் வராமல் தடுக்கலாம். இதற்கும் ஒரு திறமையான ஆரம்ப சுகாதார அமைப்பு தேவைப்படுகிறது, இதனால் அது விரைவாக பதிலளிக்கவும், மீளமுடியாத நரம்பியல் பாதிப்பைத் தடுக்கவும் முடியும், என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஒரு நபரின் வாழ்நாளில் 18 ஆபத்து காரணிகளை மாற்றியமைக்க ஆய்வு பரிந்துரைக்கிறது.

அல்சைமர் மற்றும் டிமென்ஷியா

அறிவாற்றல் குறைபாடு உள்ள நபர்களுக்கான சிறந்த மேலாண்மை உத்திகள் மற்றும் ஆதரவு அமைப்புகளுடன் அல்சைமர் மற்றும் டிமென்ஷியாவால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

டிமென்ஷியா கவனிப்புக்கு விரிவான சுகாதார சேவைகள் தேவை.

இருப்பினும், இந்தியாவில், மனநலம் தொடர்பான களங்கத்தை கருத்தில் கொண்டு, கல்வி மற்றும் ஆதரவு திட்டங்கள், சிறப்பு பராமரிப்பு சேவைகள் மற்றும் பராமரிப்பாளர் பற்றாக்குறை உள்ளது. நாடு முழுவதும் உள்ள நரம்பியல் துறைகளில் நமக்கு சிறப்பு டிமென்ஷியா மற்றும் பக்கவாதம் மையங்கள் தேவை, என்று நரம்பியல் நிபுணர் சிவராஜ் ஹங்கே (consultant neurologist with Jupiter Hospital, Pune) கூறுகிறார்.

குழந்தைகளில் மூளையழற்சி

பக்கவாதம் மற்றும் டிமென்ஷியாவுடன் ஒப்பிடும்போது இது இறப்புகளின் சிறிய விகிதத்தைக் கொண்டிருந்தாலும், மூளையழற்சி (Encephalitis) குறிப்பாக குழந்தைகளிடையே, பரவல் மற்றும் அதிக இறப்பு விகிதங்கள் ஆகியவற்றின் காரணமாக ஒரு கவலையாக உள்ளது.

தடுப்பூசி பிரச்சாரங்கள், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு ஆகிய தடுப்பு உத்திகள் முக்கியமானவை. கூடுதலாக, சுகாதார வசதிகளை வலுப்படுத்துதல், கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்துதல், அறிகுறிகள் மற்றும் தடுப்பு பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரிப்பது ஆகியவை சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு அவசியம், என்று டாக்டர் ஹங்கே கூறுகிறார்.

Read in English: Brain stroke, Alzheimer’s and diabetic nerve damage going up sharply: What a new Lancet neuro study means

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment