இதைற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. பிரட் வைத்து ஈசியா இந்த போண்டாவை செய்ய முடியும். செம்ம ருசியாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
7 பிரட் துண்டுகள்
1 பெரிய வெங்காயம்
1 உருளைக்கிழங்கு
கொத்தமல்லி நறுக்கியது சிறிய அளவு
ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி
ஒரு ஸ்பூன் சீரகப் பொடி
ஒரு ஸ்பூன் மல்லிப் பொடி
பொறிக்கும் அளவிற்கு எண்ணெய்
செய்முறை: பிரட்டை தண்ணீரில் முக்கி எடுக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் பிரட்டை பிய்த்து போடவும், அதில் வெங்காய் நறுக்கியது, உருளைக்கிழங்கு துருவியது, கொத்தமல்லி நறுக்கியது, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மல்லிப் பொடி சேர்க்கவும். தொடர்ந்து இதை நன்றாக பிசைந்துகொள்ளவும். இதை உருண்டைகளாக மாற்றி எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“