தேவையான பொருட்கள்
1 பாக்கெட் பிரட்
பொறிக்கும் அளவு எண்ணெய்
திராட்சை 8
முந்திரி 10
சர்க்கரை 100 கிராம்
1 கப் தண்ணீர்
1 டேபிள் ஸ்பூன் நெய்
1 கப் காய்ச்சிய பால்
செய்முறை: பிரட்டின் ஓரங்களை வெட்ட வேண்டும். பிரட்டை பாதியாக வெட்டிகொள்ள வேண்டும். எண்ணெய்யில் பிரட்டை பொறித்து எடுக்கவும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளங்கள். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, திராட்ச்சைகளை வறுத்து எடுத்து வைத்துகொள்ளுங்கள். அதில் சர்க்கரை சேர்த்து கிளரவும். தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பாகு ரெடி ஆனதும். அதில் பிரட் பொறித்ததை சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து கிளர வேண்டும். தொடர்ந்து பாலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து வறுத்த திரச்சைகள், முந்திரிகளை சேர்த்து கிளரவும். சுவையான பிரட் அல்வா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“