/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-2019-07-15T153001.128.jpg)
bread sandwich recipe, sandwich recipes with mayonnaise, potato sandwich recipes, bread sandwich recipe in tamil, home made sandwich recipe, how to make bread sandwich at home, cheese sandwich recipe
Easy Bread Sandwich Recipe in Tamil: சாண்ட்விச்கள் என்றாலே குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்த சிற்றுண்டி ஆகும். மாலைநேரங்களில் தேநீர் நேரத்தின்போது சாண்ட்விச் வித் டீ, அன்றைய மாலைப்பொழுது இனிமையானதாக அமையும். பிரட் சாண்ட்விச், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டி ஆகும்.
பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி?
தேவையானவை
பிரட் துண்டுகள் - 10
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
கேரட் - 3
பச்சைமிளகாய் - 3 (காரத்திற்கேற்ப)
மஞ்சள்தூள் - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - தேவைக்கு
செய்முறை
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
லேசாக வதங்கியதும் கேரட் துருவல், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும். (இதில் பொடியாக நறுக்கின புதினா, மல்லிதழையும் சேர்க்கலாம்)
ப்ரெட்டின் இரு பக்கமும் நெய் தடவி மசாலா கலவையை பரப்பி வைக்கவும். (இதன் மேல் சீஸ் துருவியும் சேர்க்கலாம்)
மேலே மற்றொரு ப்ரெட்டால் மூடி சாண்ட்விச் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.
சாஸ் வைத்து சாப்பிட சுவையான ப்ரெட் சாண்ட்விச் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.