/tamil-ie/media/media_files/uploads/2020/10/ulunthu-kanji-tamil.jpg)
Breakfast Recipe Tamil, Ulundhu Kanji Making Tamil Video: காலை டிபனோ, இரவு டின்னரோ அவசரமாக செய்ய வேண்டும். சிம்பிளான சத்தான உணவுப் பொருளாகவும் இருக்க வேண்டும். இப்படியான சூழலில், நீங்கள் உளுந்து கஞ்சியை தேர்வு செய்யலாம். மிகச் சிக்கனமான, சத்தான, எளிதில் ஜீரணமாகக்கூடிய, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடத்தக்க உணவு இது, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு இது மருந்தாகவே உதவும்.
உளுந்தம் பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதை அறிவோம். எனவே இது ‘மிஸ்’ பண்ணக்கூடாத ஒரு உணவுப் பொருளும்கூட! உளுந்து கஞ்சியை எளிமையான முறையில் குக்கரில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்.
Ulundhu Kanji Making Tamil Video: உளுந்து கஞ்சி
உளுந்து கஞ்சி தயார் செய்யத் தேவையான பொருட்கள்: பச்சரிசி - 1/2 கப், உளுந்து - 1/2 கப், தண்ணீர் - 7 கப், பூண்டு (சிறியது) - 30 பல், தேங்காய்ப் பால் - 1 கப், உப்பு - தேவைக்கு.
செய்முறை: குக்கரில் உளுந்தை போட்டு வாசனை வரும் வரை வறுங்கள். அதில் 5 கப் தண்ணீர், பச்சரிசி, உப்பு, பூண்டு சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 8 விசில் வரும்வரை வேக விடவும்.
2 கப் தண்ணீரை தனியாக கொதிக்க வைக்கவும். குக்கரில் பிரஷர் போனதும் திறந்து, இந்த 2 கப் கொதிக்கும் தண்ணீரை சேர்த்துக் கலக்கவும். பிறகு 1 கப் தேங்காய்ப் பால் சேர்த்துக் 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது சத்தான சுவையான உளுந்து கஞ்சி தயார்.
எளிதில் ஜீரணமாகும் இந்த உணவு, இட்லியைப் போலவே உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. காலை, இரவு என எந்த வேளையிலும் சாப்பிடலாம். தேங்காய் துவையல் அல்லது கட்சி சட்னியை இதற்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தினால், சுவையோ சுவைதான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.