பிரா- இதை அணியலமா? அணியக் கூடாதா? உலகெங்கிலும் உள்ள பல பெண்கள் பிராவை எரிச்சலூட்டும் ஒன்றாக பார்க்கிறார்கள். தங்கள் மார்பகங்களை ப்ராக்களில் கூண்டில் அடைப்பதை விட சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள்.
ஆனால் ப்ரா இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதையோ- அல்லது வீட்டிற்குள்ளேயே இருப்பதைப் பற்றியோ நினைக்க முடியாத சில பெண்களும் இருக்கிறார்கள். மேலும் நீண்ட காலத்திற்கு ப்ரா அணியாமல் இருப்பது, மார்பகங்களைத் தொங்கச் செய்யும் என்ற நம்பிக்கையும் உள்ளது
ஆனால், இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா?
ப்ரா அணிவது அல்லது அணியாமல் இருப்பது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது, என்கிறார் டாக்டர் தனயா. இது ஒரு பேஷன் ஸ்டேட்மெண்ட். ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். பிரா, தங்கள் மார்பகங்களை அழகாகவும், எடுப்பாகவும் காட்டும் என்று பலர் நினைக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/sZDCSdFtiDIN3V63lzwT.jpg)
சிலர் ப்ரா அணிந்திருக்கும் போது தங்கள் உடல் தோற்றத்தை விரும்புகிறார்கள்... சிலர் - பெரிய மார்பகங்களுடன் - ப்ரா அணியாமல் விளையாடுவது மிகவும் கடினம்.
யாராவது பிரா அணிய விரும்பினால், அவர்களுக்கு அதற்கான சுதந்திரம் உள்ளது. அதே போல் அணிய விரும்பாதவர்களுக்கும்.
ப்ரா அணியாமல் இருப்பதால் உங்கள் மார்பகங்கள் தொங்காது. அண்டர் வைர்டு ப்ரா மற்றும் கருப்பு ப்ரா அணிவதால் புற்றுநோய் வராது. இது உண்மையிலேயே ஒருவரின் தனிப்பட்ட விருப்பம், என்கிறார் டாக்டர் தனயா.
இப்போ சொல்லுங்க! நீங்க பிரா டீமா அல்லது நோ-ப்ரா டீமா?
Read in English: Is it necessary to wear a bra for breast health?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“