தாய் ஒரு குழந்தைக்கு கொடுக்கக்கூடிய சிறந்த பரிசுகளில் ஒன்று தாய்ப்பால்.
குழந்தைகளுக்கான உகந்த வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிபாடிகளின் சரியான கலவையை இது வழங்குகிறது.
தாய்ப்பால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே வலுவான உணர்ச்சிப் பிணைப்பை வளர்க்கிறது. இந்த ’தங்க திரவம்' ஆரம்பகால வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், தாய்மார்கள் தாய்ப்பாலை சேமிக்க வேண்டிய சில சூழ்நிலைகள் உள்ளன, இது அவர்கள் அருகில் இல்லாத சூழலிலும் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க உதவுகிறது. எனவே சரியான சேமிப்பு, பால் அதன் மதிப்புமிக்க குணங்களை தக்கவைத்துக்கொள்வதை உறுதி செய்கிறது.
தாய்ப்பாலை திறம்பட சேமிப்பதற்கு நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட உதவிக்குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இங்கே உள்ளன.
சரியான நேரம்
மார்பகங்கள் சௌகரியமாக நிரம்பியிருப்பதை உணரும் போது பால் சேமிப்பது நல்லது. மார்பகத்திலிருந்து பால் முழுவதுமாக அகற்றப்படாதபோது அல்ல.
அமைதியான சூழல்
மன அழுத்தம் மற்றும் பதற்றம் பால் சுரப்பதை தடுக்கலாம். பால் சேகரிக்கும் முன், அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும், இது milk ejection reflex தூண்ட உதவுகிறது. ஒரு மென்மையான அனுபவத்துக்கு, அமைதியான அறையைக் கண்டறியவும்.
மசாஜ்
சேகரிக்கும் முன் மென்மையான மார்பக மசாஜ் மற்றும் வார்ம் கம்பிரெஸர் பயன்படுத்துவது பால் ஓட்டத்தை சிறப்பாக தூண்டி மார்பகங்களை திறம்பட காலியாக்குவதை எளிதாக்கும் என்று மூத்த பாலூட்டுதல் ஆலோசகர் டாக்டர் வந்தனா சர்க்கார் (senior lactation consultant, Apollo Cradle and Children Hospital, Chirag Enclave, New Delhi) கூறினார்.
இரண்டு மார்பகங்களையும் ஒரே நேரத்தில் பம்ப் செய்யுங்கள்
டபுள் எலெக்ட்ரிக் பம்பைப் பயன்படுத்தி, இரண்டு மார்பகங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் சேகரிப்பது, நேரத்தை மிச்சப்படுத்துவதோடு பால் உற்பத்தியையும் அதிகரிக்கும்.
சுத்தமான கன்டெய்னர்
தாய்ப்பாலைச் சேமிப்பதற்காக நீங்கள் பயன்படுத்தும் கன்டெய்னர் சுத்தமாகவும், குறிப்பாக இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும் உறுதிப்படுத்தவும். BPA இல்லாத பாட்டில்கள் அல்லது பிரெஸ்ட்மில்க் ஸ்டோரேஜ் பேக்ஸ் பாதுகாப்பான தேர்வுகள்.
கொஞ்சமாக சேமித்து வைக்கவும்
ஒரு கண்டெய்னருக்கு 2 முதல் 4 அவுன்ஸ் வரை தாய்ப்பாலை சிறிய அளவில் சேமித்து வைப்பது நல்லது. இந்த வழியில், உங்கள் குழந்தைக்குத் தேவையானதை மட்டுமே நீங்கள் கொடுக்கலாம், விலைமதிப்பற்ற பால் வீணாகும் அபாயத்தைக் குறைக்கலாம்.
குளிரூட்டல்
புதிதாக சேகரித்த தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் 24 மணி நேரம் வரை வைத்திருக்கலாம், மேலும் அதிக நேரம் சேமித்தால் அதன் ஊட்டச்சத்துக்கள் குறையும். ஃபிரிட்ஜின் உள்பகுதிக்குள் வைக்கவும், அங்கு வெப்பநிலை மிகவும் சீராக இருக்கும்.
பால் கலப்பதைத் தவிர்க்கவும்
வெவ்வேறு நேரங்களில் சேகரித்த பால் இருந்தால், அவை ஒரே வெப்பநிலையில் இல்லாவிட்டால், அவற்றைக் கலப்பதைத் தவிர்க்கவும்.
அதற்கு பதிலாக, அவற்றை தனித்தனி கன்டெய்னரில் சேமித்து, முதலில் சேகரிக்கும் பாலை குழந்தைக்கு ஊட்டவும். பால் சேகரிக்கும் நேரம் மற்றும் தேதியுடன் லேபிளிட வேண்டும் என்று டாக்டர் வந்தனா கூறினார்.
டாக்டர் அஷ்வினி பலேராவ் காந்தி (consultant, gynaecologist, P D Hinduja Hospital Medical Research Centre, Mahim, Mumbai) சில குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
சுகாதாரத்தை பராமரிக்க தாய்ப்பாலை சேகரிக்கும் முன் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
சுத்தமான மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட பிரெஸ்ட் பம்ப் அல்லது கையால் சேகரிக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தவும்.
ஒவ்வொரு கன்டெய்னரிலும் சேகரிக்கும் தேதி மற்றும் நேரத்தைக் குறிக்கவும்.
ஆன்டிபாடிகள் அழிக்கப்படுவதால் தாய்ப்பாலை காய்ச்சக்கூடாது.
பயன்படுத்தாத பாலை ஃபிரிட்ஜில் 24 மணி நேரம் கழித்து அல்லது ஃப்ரீசரில் 4-6 மாதங்களுக்குப் பிறகு அப்புறப்படுத்தவும்.
தாய்ப்பால் சேமிப்பு தொடர்பாக சுகாதார நிபுணரின் பரிந்துரைகளை எப்போதும் பின்பற்றவும்.
ஒவ்வொரு தாயின் பாலூட்டும் பயணமும் தனித்துவமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனை மற்றும் ஆதரவிற்கு பாலூட்டுதல் ஆலோசகர் அல்லது சுகாதார நிபுணரை அணுகுவது அவசியம், என்று டாக்டர் காந்தி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.