Advertisment

தாய்ப்பால் கொடுக்கும் போது இறுக்கமான பிரா அணியலாமா? மருத்துவ நிபுணர் விளக்கம்

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவை குறித்து ஹைதராபாத் பெர்னாண்டஸ் மருத்துவமனையின் பிசியோதெரபி மற்றும் பாலூட்டுதல் நிபுணர் டாக்டர் லதா பாலசுந்தரம் சொல்லும் சில குறிப்புகள் இங்கே:

author-image
WebDesk
New Update
Breastfeeding

Breastfeeding

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தாய் ஒரு குழந்தைக்கு கொடுக்கக்கூடிய சிறந்த பரிசுகளில் ஒன்று தாய்ப்பால்.

Advertisment

இது ஊட்டச்சத்துக்கான முக்கிய ஆதாரமாக மட்டுமல்லாமல், குழந்தைக்கு வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும், தாய் மற்றும் குழந்தை இடையே பிணைப்பை மேம்படுத்தவும், இருவருக்கும் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த தங்க திரவம்' ஆரம்பகால வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம், ஒரு புதிய தாயாக, நீங்கள் எல்லா தரப்பிலிருந்தும் தாய்ப்பால் கொடுப்பது குறித்த ஆலோசனைகளால் மூழ்கியிருக்கலாம், இது முன்னெப்போதையும் விட உங்களை குழப்பமடையச் செய்யலாம்.

எனவே, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவை குறித்து ஹைதராபாத் பெர்னாண்டஸ் மருத்துவமனையின் பிசியோதெரபி மற்றும் பாலூட்டுதல் நிபுணர் டாக்டர் லதா பாலசுந்தரம் சொல்லும் சில குறிப்புகள் இங்கே:

செய்ய வேண்டியவை

குழந்தை பிறந்ததும், அதன்பிறகும், தாயும் குழந்தையும் தோலுடன் தோல் தொடர்பு கொண்டு நேரத்தை செலவிட வேண்டும். பாலூட்டுதல் மற்றும் பிணைப்புக்கு ஒரு நல்ல கிக்ஸ்டார்ட் உட்பட Skin-to-skin contact பல நன்மைகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிறந்த உடனேயே அல்லது பிறந்த முதல் பொன்னான நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள். இது திறம்பட தாய்ப்பால் கொடுக்க ஹார்மோன்களை பயன்படுத்துகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் முன் குழந்தைக்கு வேறு எந்த pre-lacteal feed கொடுக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவும்.

சரியான latch உறுதி செய்யவும். மென்மையான தாய்ப்பால் பயணத்திற்கு இது ஒரு முக்கியமான தொடக்கமாக இருக்கும்.

ஒவ்வொரு ஊட்டத்திற்குப் பிறகும் அல்லது ஊட்டங்களுக்கு இடையில் கூட உங்கள் குழந்தைக்கு அவர்கள் வசதியாக இருப்பதை உறுதிசெய்யவும்.

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடிய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலைகளை எப்போதும் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் பசியின் அறிகுறிகளைப் புரிந்து கொள்ளுங்கள், எவ்வளவு அடிக்கடி, எவ்வளவு நேரம் உணவளிக்க வேண்டும் என்பதை உங்கள் குழந்தை உங்களுக்கு வழிகாட்டட்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் போது வசதியாக இருக்க நன்கு சமச்சீர் உணவை உண்ணுங்கள் மற்றும் நிறைய திரவங்களை குடிக்கவும்.

செய்யக்கூடாதவை

Mom kid

குழந்தைக்கு சீக்கிரம் பாசிஃபையர், டீட்ஸ் (pacifiers, teats) மற்றும் பாட்டில்களை அறிமுகப்படுத்துவதை தவிர்க்கவும், ஏனெனில் இது மார்பகத்தில் செலவழிக்கும் நேரத்தைத் தடுக்கிறது.

வலி, கடினமான அல்லது வீங்கிய மார்பகங்களின் அறிகுறிகளை சாதாரணமாகக் கருத வேண்டாம்; உடனடியாக உதவியை நாடுங்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் போது இறுக்கமான பிரா அணிவதை தவிர்க்கவும். இது பால் குழாய்களில் அடைப்பு மற்றும் பால் ஓட்டத்தை ஏற்படுத்தும்.

காஃபின் மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் போது சுயமாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம். தாய்ப்பால் கொடுக்கும் போது நீங்கள் ஏதேனும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்றால் எப்போதும் ஒரு சுகாதார நிபுணரை அணுகவும்.

உங்கள் குழந்தையை பீடி, சிகரெட் புகைக்கு வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவும்.

அதிக பால் சுரக்க குறிப்பிட்ட உணவுகளை நீக்குவதையோ அல்லது சில உணவுகளை உங்கள் உணவில் இருந்து அதிகமாக உண்பதையோ தவிர்க்கவும்.

தாய்க்கு குறிப்பிட்ட உணவு ஒவ்வாமை இல்லாவிட்டால் அனைத்து உணவுகளும் மிதமாக பரிந்துரைக்கப்படுகிறது.

இதில் ஏதேனும் தடைகளை நீங்கள் சந்தித்தால், தேவைப்பட்டால் பாலூட்டும் நிபுணரின் உதவியையும் ஆதரவையும் பெறவும். உங்கள் உடலை உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் வளர்க்க நேரம் ஒதுக்குங்கள்.

அது உங்கள் தாய்ப்பாலூட்டும் பயணத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும், என்று அவர் முடித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment