கடந்த காலத்தில் சர்க்கரை நோய் ஏதும் இல்லாத, கிட்டத்தட்ட 40 லட்சம் இந்தியப் பெண்கள் கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்க்கையில் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது. ஆனால் இந்த ஆபத்தை குறைக்கக்கூடிய ஒன்று உள்ளது-அதுதான் தாய்ப்பால்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள், ஏனெனில் தாய்ப்பால் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவும்.
பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
குழந்தையைப் பராமரிப்பதற்கும் தாய்-சேய் பிணைப்பை உருவாக்குவதற்கும் தாய்ப்பால் சிறந்த வழி.
ஆஸ்டியோபோரோசிஸ், முடக்கு வாதம், இதய நோய், டைப் 2 நீரிழிவு, கர்ப்பத்திற்குப் பிந்தைய எடை இழப்பு, மார்பக புற்றுநோய், யுட்ரின் (uterine) புற்றுநோய் மற்றும் கருப்பை (ovarian) புற்றுநோய் உள்ளிட்ட பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்புகளை தாய்ப்பால் கொடுப்பது குறைக்கிறது.
உடல் நலன் மட்டுமல்ல, பிரசவத்திற்குப் பிந்தைய கவலையை நிர்வகிப்பதில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. தாய்ப்பால் கொடுப்பது ஆக்ஸிடாஸின் எனப்படும் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது, இது தாயின் மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் புதிய தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வு அபாயத்தைக் குறைக்கிறது.
தாய்ப்பால் கொடுப்பது நீரிழிவு ஏற்படுவதை எப்படி தடுக்கும்?
தாய்ப்பால் கொடுப்பது மாதவிடாய் திரும்புவதை அடக்க உதவுகிறது. குழந்தைக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கும் போது, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சில பெண்களுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு (low blood sugar) ஏற்படலாம். எனவே, குழந்தைக்கு பாலூட்டும் போது குளுக்கோஸை அருகில் வைத்திருப்பது நல்லது.
நீரிழிவு நோயுடன் தாய்ப்பால் கொடுப்பது சவாலானது, ஏனெனில் பெண்களுக்கு மார்பகங்களில் வீக்கம் ஏற்படலாம். இந்த நிலை மாஸ்டிடிஸ் (mastitis) என்று அழைக்கப்படுகிறது. மார்பகங்களில் வீக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு இரண்டு மார்பகங்களிலிருந்தும் உணவளிக்க வேண்டும்.
இந்த பெண்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவையும் சரிபார்க்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது பால் தரத்தை பாதிக்கும். பால் உற்பத்தி செய்யும் திறனையும் இது பாதிக்கலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு ஏன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுப்பது குழந்தை பருவத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிகப்படியான ஊட்டச்சத்து ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. இது பிற்கால வாழ்க்கையில் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இருதய நோய் அபாயத்தையும் குறைக்கும்.
தாய்ப்பால் இரத்த குளுக்கோஸ் அளவை எப்படி குறைக்கிறது?
தாய்ப்பாலை உற்பத்தி செய்ய இரத்தத்தில் உள்ள குளுக்கோஸைப் பயன்படுத்துவதன் மூலம். இரத்த சர்க்கரை அளவை குறைக்க, தாய்ப்பால் உதவுகிறது. இது கூடுதல் கலோரிகளை எரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது, இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது.
தாய்ப்பால் கொடுக்கும் அனுபவத்தை எளிதாக்க
தாய்ப்பால் கொடுக்கும் முன் அல்லது கொடுக்கும்போது சிற்றுண்டி சாப்பிடுங்கள்.
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கவும்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது அருகில் ஒரு பிஸ்கட் அல்லது பழம் போன்ற உடனடி ஸ்னாக்ஸ் வைத்திருங்கள்.
மன அழுத்தத்தை தவிர்க்கவும் மற்றும் மார்பக அழற்சியை சரிபார்க்கவும்.
நீரேற்றட்டத்துடன் இருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“