தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகம் தொங்குமா? நிபுணர் சொல்வது இங்கே

எனவே, உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப்’ குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகம் தொங்குமா? நிபுணர் சொல்வது இங்கே
தாய்ப்பால் கொடுப்பது மார்பகத்தின் வடிவத்தையோ அளவையோ பாதிக்காது

தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது.

எனவே, உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப்’ குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மற்றும் முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது – அதாவது தண்ணீர் உட்பட வேறு உணவுகள் அல்லது திரவங்கள் வழங்கக் கூடாது” என்று உலக சுகாதார அமைப்பின் இணையதளம் கூறுகிறது.

ஆனால், மற்ற எல்லா விஷயங்களைப் போலவே, இதிலும் பல கட்டுக்கதைகள் உள்ளன – தாய்ப்பால் கொடுப்பது மார்பகங்களை தொய்வடையச் செய்வது முதல் பெரிய மார்பகங்கள் அதிக பால் உற்பத்தி செய்யும் என்பது வரை. ஆனால் எதிலும் உண்மை உள்ளதா?

அமிர்தா மருத்துவமனையின் மகப்பேறியல் மருத்துவர் ராதாமணி கே, தாய்ப்பால் தொடர்பான பல்வேறு கட்டுக்கதைகள் குறித்து indianexpress.com உடன் பேசினார்.

#பெரிய மார்பகங்கள் அதிக பால் தரும்

மார்பகத்தின் அளவு மார்பகங்களில் இருக்கும் கொழுப்பு திசுக்களின் அளவைப் பொறுத்தது. சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களில் கொழுப்பு திசுக்கள் குறைவாகவும், பெரிய மார்பகங்களைக் கொண்டவர்கள் அதிக கொழுப்பு திசுக்களைக் கொண்டுள்ளனர்.

மார்பக அளவைப் பொருட்படுத்தாமல், அனைத்து பெண்களும் ஆரோக்கியமான தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியும், ஏனெனில் இது சுரப்பி திசுக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது, கொழுப்பு திசுக்களால் அல்ல.

இருப்பினும், சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள்’ மார்பக திசுக்களில் குறைந்த அளவு பால் இருப்பதால் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருக்கும்.

பெரிய மார்பகங்கள் அதிக பால் தரும் என்பது ஒரு கட்டுக்கதை.

#தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தொங்கும்

ராதாமணியின் கூற்றுப்படி, தாய்ப்பால் கொடுப்பது மார்பகத்தின் வடிவத்தையோ, அளவையோ பாதிக்காது.

கர்ப்ப காலத்தில்  இயற்கையாக அளவு அதிகரிப்பது மற்றும் பிரசவித்த பிறகு உடனே எடை குறைவதால் மார்பகங்கள் பாதிக்கப்படுகின்றன. இருப்பினும், தாய்ப்பால் கொடுக்கும் போது அவை பெரிதாக இருக்கும். உணவளித்த பிறகு, மார்பகம்’ மெதுவாக அளவு குறைகிறது.

ஒரு பெண்ணின் மார்பகத்தை ஆதரிக்கும் தசைநார்கள் கர்ப்ப காலத்தில் கனமாக இருப்பதால் ஸ்ட்ரெட்ச் ஏற்படுகிறது. கர்ப்பத்திற்குப் பிறகு, ஒரு பெண் தாய்ப்பால் கொடுக்காவிட்டாலும், தசைநார்கள் நீட்டப்படுவது (stretching) மார்பகத்தின் தொய்வுக்கு பங்களிக்கும்,” என்று அவர் கூறினார்.

#தாய்ப்பால் கொடுத்தால் மருந்து சாப்பிட முடியாது

சுமார் 15% மருந்து பொதுவாக தாய்ப்பாலின் மூலம் மாற்றப்படுகிறது, அதில் 1-2% மட்டுமே குழந்தையால் உறிஞ்சப்படுகிறது.

ராதாமணியின் கூற்றுப்படி, பாராசிட்டமால், ஆஸ்துமா இன்ஹேலர்கள், வைட்டமின்கள் மற்றும் பெரும்பாலான ஆன்டி-பயாடிக்’ தாய்ப்பால் கொடுக்கும் போது எடுத்துக்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது.

இருப்பினும், கோடீன் (codeine), நாசல் டிகன்ஜெஸ்டண்ட்ஸ் (nasal decongestants), ஆஸ்பிரின், மூலிகை மருந்துகள், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், ஓரல் ரெட்டினாய்டுகள், அயோடின், அமியோடரோன், ஸ்டேடின்கள், ஆம்பெடமைன்கள், எர்கோடமைன்கள் (anti migraine agents) தவிர்க்கப்பட வேண்டும்.

பெரும்பாலான ஆன்டிபயாடிக’  தாய்ப்பால் கொடுக்கும் போது எடுத்துக்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது.

தாய் மருந்து சாப்பிடுவதற்கு சற்று முன்பு குழந்தைக்கு உணவளிப்பதன் மூலம், குழந்தைக்கு குறைந்த மருந்து கிடைக்கும். குறைமாத மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளில் மருந்து நச்சுத்தன்மையின் ஆபத்து அதிகமாக உள்ளது, ஆனால் ஆறு மாதங்களுக்கும் மேலான குழந்தைகளில் அரிதாக உள்ளது.

#நோய்வாய்ப்பட்ட பெண் தாய்ப்பால் கொடுக்கக்கூடாது

தாய்க்கு சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் முலையழற்சி போன்றவை ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரலாம். மேலும், கூடுதல் நன்மை என்னவென்றால், இது பாதுகாப்பு ஆன்டிபாடிகளை மாற்றும்.

ஆனால் HIV, T செல் லிம்போட்ரோபிக் வைரஸ் வகை I அல்லது வகை II (HTLV-1/2), எபோலா வைரஸ் போன்ற நிலைகளில், தாய்ப்பால் கொடுப்பது முரணாக உள்ளது. தாயால் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலைகள் பின்வருமாறு: யூரோசெப்சிஸ், செப்டிசீமியா, நிமோனியா, பிபிஹெச், ஷாக் மற்றும் ஐசியு கவனிப்பு தேவைப்படுபவர்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

#தாய்ப்பால் கொடுப்பது கர்ப்பம் தரிக்காமல் தடுக்கும்

மாதவிடாய் இல்லாமல் இருந்தபோதிலும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு அண்டவிடுப்பு (Ovulation) ஏற்படலாம். எனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்டவிடுப்பு ஏற்படவில்லை என்றால், அவை அமினோரோஹோயிக் நிலையில் இருக்கும்.

பிறப்பு கட்டுப்பாட்டாக தாய்ப்பால் கொடுப்பது லக்டடேஷனல் அமினோரியா (Lactational Amenorrhoea Method) முறை என்று அழைக்கப்படுகிறது. சரியாகச் செய்தால், இந்த முறையானது ஹார்மோன் கருத்தடைகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும். தாய்ப்பாலைத் தவிர குழந்தைக்கு ஃபார்முலா ஃபீட் கொடுத்தால், தாய்ப்பால் கர்ப்பத்தைத் தடுக்காது.

லக்டடேஷனல் அமினோரியா முறையானது 2%க்கும் குறைவான தோல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது.

ஃபார்முலா உணவு, பாலூட்டலுக்குப் பதிலாக குழந்தைக்கு மாற்று உணவு ஊட்டுதல், இவை அனைத்தும் பிறப்புக் கட்டுப்பாட்டாக பாலூட்டும் அமினோரியாவின் செயல்திறனைக் குறைக்கின்றன, ”என்று அவர் மேலும் கூறினார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Breastfeeding myth breastfeeding diet breastfeeding benefits