தாய், ஒரு குழந்தைக்கு கொடுக்கக்கூடிய சிறந்த பரிசுகளில் ஒன்று தாய்ப்பால். குழந்தைகளுக்கான உகந்த வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிபாடிகளின் சரியான கலவையை இது வழங்குகிறது.
தாய்ப்பால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே வலுவான உணர்ச்சிப் பிணைப்பை வளர்க்கிறது. இந்த ’தங்க திரவம்' ஆரம்பகால வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், அதிகமாக தாய்ப்பால் கொடுத்தால் குழந்தை தாயுடன் ஓட்டிக் கொள்ளுமா?
தாய்ப்பாலூட்டுதல் என்பது தாயையும் அவளது குழந்தையையும் உணர்வுப்பூர்வமாக இணைக்கிறது. உணர்ச்சி மற்றும் உயிரியல் காரணிகளால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு தனித்துவமான பிணைப்பு உருவாகிறது.
ஒரு தாய், தாய்ப்பால் கொடுக்கும்போது, உடல் ஆக்ஸிடாசினை வெளியிடுகிறது, இது பெரும்பாலும் 'காதல் ஹார்மோன்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹார்மோன் அரவணைப்பு, அன்பு, இணைப்பு போன்ற உணர்வுகளை வளர்க்கிறது, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை அமைதியாகவும் இணைக்கவும் உதவுகிறது, என்று டாக்டர் ரவ்னீத் ஜோஷி கூறினார். (MD Paediatrics and lactation specialist)
குழந்தைகளில் மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் குறைக்க தாய்ப்பால் உதவுகிறது. இது குழந்தை உணர்வுபூர்வமான நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் பெற உதவுகிறது, தனித்துவமான பிணைப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
குழந்தை தாயை சார்ந்திருப்பதால் ஓட்டிக் கொள்ளுமா?
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தை ஒட்டிக்கொள்ளும் என்பது பொதுவான தவறான கருத்து. எனினும் அது உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.
பிணைப்புக்கு பதிலாக தாய்ப்பால் ஒரு பேலன்ஸ்டு பாராசிம்பேடிக்-சிம்பதெட்டிக் நரம்பு மண்டலத்தை ஆதரிக்கிறது, இது உணர்ச்சி நிலைத்தன்மை மற்றும் நெகிழ்ச்சிக்கு பங்களிக்கிறது, என்றார் டாக்டர் ஜோஷி. இதன் பொருள், தாய்ப்பால் குழந்தைக்கு பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் உணர்வை வலுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான சுதந்திரத்தை வளர்ப்பதற்கும் உதவுகிறது.
தாய் அதிகமாக தாய்ப்பால் கொடுத்தால் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் (தந்தை போன்ற) குழந்தையின் பிணைப்பு பாதிக்கப்படுமா?
இல்லை, தாய்ப்பால் குழந்தையின் உணர்வுகளை வளர்க்கிறது, எனவே குடும்பத்தில் உள்ள அனைவருடனும் ஆரோக்கியமான உறவுகளை ஆதரிக்கிறது. இருப்பினும், மற்ற குடும்ப உறுப்பினர்கள், குழந்தையுடன் வலுவான பிணைப்புகளை வைத்திருப்பது, விளையாடுவது மற்றும் தினசரி நடைமுறைகளில் ஈடுபடுவது போன்ற தொடர்புகளின் மூலம் இதை உருவாக்க வேண்டும்.
ஸ்கின் டு ஸ்கின் கான்டாக்ட் குறிப்பாக நன்மை பயக்கும், ஏனெனில் இது குழந்தையின் உடல் வெப்பநிலை, இதய துடிப்பு மற்றும் மன அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, அதே நேரத்தில் தளர்வு மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது." என்றார் டாக்டர் ஜோஷி.
Read in English: World Breastfeeding Week: Is there such a thing as excessive breastfeeding?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.