வாயை திறந்து தூங்கினால் இவ்வளவு பிரச்னை இருக்கு; சரி செய்ய இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க; டாக்டர் கார்த்திகேயன்
தினமும் சில நிமிடங்கள் சரியான சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வாய்வழி சுவாசப் பழக்கத்தை மாற்ற முடியும். இது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
தினமும் சில நிமிடங்கள் சரியான சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வாய்வழி சுவாசப் பழக்கத்தை மாற்ற முடியும். இது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
வாயை திறந்து தூங்கினால் இவ்வளவு பிரச்னை இருக்கு; சரி செய்ய இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க; டாக்டர் கார்த்திகேயன்
நாம் சுவாசிக்கும் விதம் நம் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறிந்திராத உண்மை. ஆனால், வாய் வழியாக சுவாசிப்பது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழக்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
Advertisment
சாதாரணமாக நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசிக்க வேண்டும். இது காற்றை ஈரப்பதமாக்கி, தூசு, கிருமிகளை வடிகட்டி நுரையீரலுக்கு அனுப்புகிறது. ஆனால், வாய் வழியாக சுவாசிக்கும்போது இந்த இயற்கை பாதுகாப்பு அரண் தாண்டி காற்று நேரடியாக உள்ளே செல்வதால் பலவிதமான பிரச்னைகள் உருவாகின்றன.
என்னென்ன ஆபத்துகள் காத்திருக்கின்றன?
வாய் வழியாக சுவாசிப்பதால் வாயில் வறட்சி ஏற்பட்டு பாக்டீரியாக்கள் எளிதில் வளர ஏதுவாகிறது. இது வாய் துர்நாற்றம், பல் சொத்தைக்கு முக்கிய காரணம். மேலும், குழந்தைகளின் பற்கள் கோணலாக வளரவும், முகத்தின் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, மூக்கின் வழியாக சுவாசிக்கும்போது உற்பத்தியாகும் நைட்ரிக் ஆக்சைடு என்ற முக்கியமான மூலக்கூறு கிடைப்பதில்லை. இது ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வாய் வழியாக சுவாசிப்பதால் இந்த நன்மையை நாம் இழக்க நேரிடுகிறது.
Advertisment
Advertisements
தூக்கமின்மை மற்றும் குறட்டை பிரச்னைகள் உள்ளவர்களுக்கு வாய்வழி சுவாசம் முக்கிய காரணமாக இருக்கலாம். வாய் வழியாக சுவாசிப்பவர்களில் 42% பேருக்குத் தூக்கத்தில் மூச்சுத் திணறல் மற்றும் குறட்டை வர வாய்ப்புள்ளது. இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
வாய் வழியாக சுவாசிப்பதை சரிசெய்யும் வழிகள்
மூக்கடைப்புக்கான பயிற்சி, நாக்கின் சரியான நிலைப்பாடு, உதடுகளுக்கான பயிற்சி மற்றும் சரியான சுவாச முறை ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும். பக்கவாட்டில் படுத்துக்கொள்வது, படுக்கை அறையைச் சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது ஆகியவை வாய்வழி சுவாசத்தைக் குறைக்க உதவும். தினசரி நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பது, துளசி இட்ட நீரில் ஆவி பிடிப்பது மற்றும் இரவு மஞ்சள், மிளகுத்தூள், இஞ்சி கலந்த பால் குடிப்பது போன்றவையும் பயனுள்ளவை என்கிறார் டாக்டர் கார்த்திகேயன்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.