Advertisment

மாப்பிள்ளைக்கு மாங்கல்யம் கட்டிய மணப்பெண்... கலெக்டர் வீட்டு திருமணத்தில் நடந்த சுவாரசியம்!

திருமணத்தில் மாப்பிள்ளைக்கு, மணப்பெண் மாங்கல்யம் கட்டிய சுவாரசியமான நிகழ்வு, திருவள்ளூர் துணை ஆட்சியர் இல்ல திருமண விழாவில் அரங்கேறியுள்ளது. ஆண் மற்றும் பெண் இருவரும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக இந்நிகழ்வு நடந்ததாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Marriage

உலகில் ஆண், பெண் என அனைத்து பாலினத்தவரும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதை நாம் பார்த்திருப்போம். இவற்றில் சில இயற்கையாகவும், சில மனிதர்களாலும் நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் திருமணத்தின் மூலம் ஆண், பெண் ஆகிய இருவரும் ஏற்றத்தாழ்வுகளின்றி சமமானவர்கள் என்பது உணர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

திருவள்ளூரின் துணை ஆட்சியரான செல்வமதி மற்றும் வெங்கடேசன் தம்பதி, திருச்சி மாவட்டம், கே.கே. நகர் இந்தியன் வங்கி காலனியில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மருத்துவர் ஸ்வஐன்யா மற்றும் முகேஷ்குமார் ஆகியோரின் திருமணம் திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண வரவேற்பின் போது விருந்தினர்களை மகிழ்விக்கும் விதமாக கச்சேரிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக பழங்கால இசைக் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், அவற்றை வாசிக்கும் முறை குறித்து அனைவருக்கும் செய்து காண்பிக்கப்பட்டது.

திருமண நிகழ்வில் மிக முக்கியமானதாக கருதப்படும் மாங்கல்யம் கட்டும் நிகழ்வில் தான் சமத்தும் அரங்கேறியது. மணமகளின் கழுத்தில் மணமகன் மாங்கல்யம் கட்டும் நடைமுறையே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால், இத்திருமணத்தில் மணமகளின் கழுத்தில் மணமகன் மாங்கல்யம் கட்டிய பின்னர், மணமகனின் கையில் மாங்கல்யம் கொண்டு செய்யப்பட்ட கைச்செயினை மணமகள் கட்டினார். ஆணும், பெண்ணும் அனைத்து வகையிலும் சமமானவர்கள் என்பதை அறிவுறுத்தும் விதமாக இவ்வாறு நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Marriage2

இதுமட்டுமின்றி, திருமணத்திற்கு வருகை தந்திருந்த அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு மரமாவது நட வேண்டுமென்ற நோக்கில், விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. மரம் நடுதலின் அவசியத்தை எடுத்துக் கூறும் வகையில், "பனை விதை, மாநில விதை: மாநிலம் முழுவதும் அதை விதை " என அச்சிடப்பட்ட காகித பையில் அவை கொடுக்கப்பட்டது.

இத்திருமண நிகழ்வில் உறவினர்கள், பொதுமக்கள் தொடங்கி அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இயல்பாக நடைபெறும் திருமணத்தில் பல்வேறு புதுமைகள் புகுத்திய இந்நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Indian Marriage
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment