வித்தியாசமான கத்திரிக்காய் முருங்கை குழம்பு. செம்ம ருசியா இருக்கும்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் 2
சின்ன வெங்காயம் 15
முருங்கைக்காய் 1
எலுமிச்சை அளவு புளி
8 வத்தல்
1 ஸ்பூன் சீரகம்
2 ஸ்பூன் தனியா
1 தக்காளி
2 சில்லு தேங்காய்
நல்லெண்ணை
கடுகு
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
செய்முறை : கத்திரிக்காய், முருங்கைக்காய் சுத்தம் செய்து நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் மல்லி, சீரகம், வத்தல் சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து புளியை கரைத்து வைத்துகொள்ளவும். மிக்ஸியில் வறுத்த பொருட்கள், தக்காளி, தேங்காய் சேர்ந்து அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்க்கவும். தொடர்ந்து அதில் சின்ன வெங்காயம் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்க்கவும். சேர்த்து நன்றாக கிளரவும். தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“