Advertisment

கிராமத்து ஸ்டைல் காரசார கத்தரி வறுவல்; இப்படி செய்யுங்க

சுவையான கத்தரிக்காய் பொடிக் கறி (வறுவல்) எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Brinjal.jpg

காரசாரமான சுவையான கிராமத்து ஸ்டைல் கத்தரிக்காய் பொடிக் கறி அல்லது வறுவல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையானவை 

கத்தரிக்காய் – 3 கப் 
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 5
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தாள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ¼ டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை  

முதலில் கத்தரிக்காயை  நறுக்கி பாத்திரம் எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடங்கள் மூடிய  வைக்கவும். 

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு 
மிளகாய் வற்றல், தேங்காய்  ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இந்த கலவை ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். 

இப்போது அடுப்பில் கடாய் வைத்து கத்தரிக்காயை வதக்கவும். கத்தரி வெந்ததும் அரைத்த கலவையை சேர்த்து தேவையான அளவு  உப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்கு வெந்து வந்ததும் சுவையான கத்தரிக்காய் வறுவல் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment