Brinjal Chutney Home Cooking Tamil Video: பாரம்பரியமான கத்தரிக்காய் விரும்பிகளுக்கு இது ரொம்பவே பிடிக்கும். கத்தரிக்காய் சட்னி செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.
Brinjal Chutney Home Cooking Tamil Video: பாரம்பரியமான கத்தரிக்காய் விரும்பிகளுக்கு இது ரொம்பவே பிடிக்கும். கத்தரிக்காய் சட்னி செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.
Brinjal Recipe, Brinjal Chutney Home Cooking Tamil Video எத்தனையோ சட்னி வகைகளை சாப்பிட்டிருப்பீர்கள். நம் வீட்டுச் சமையலில் அடிக்கடி இடம்பெறும் கத்தரிக்காய் சட்னி சாப்பிட்டது உண்டா? கத்தரிக்காய் சட்னி சுவையானதும்கூட!
Advertisment
பாரம்பரியமான கத்தரிக்காய் விரும்பிகளுக்கு இது ரொம்பவே பிடிக்கும். கத்தரிக்காய் சட்னி செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்.
Brinjal Recipe, Brinjal Chutney Home Cooking Tamil Video: கத்தரிக்காய் சட்னி
கத்தரிக்காய் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 4, தக்காளி - 2, சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் - சிறிது, மிளகுத் தூள் - சிறிது, கடுகு - சிறிது, உளுந்தம் பருப்பு - சிறிது, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, எண்ணெய் - சிறிது.
Advertisment
Advertisements
கத்தரிக்காய் சட்னி செய்முறை :
கத்தரிக்காய் சட்னி செய்முறை வருமாறு: கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி விடவும். பிறகு சிறிது தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். அவை வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளியுங்கள். பிறகு அதில் அரைத்த கத்தரிக்காய் விழுதை கொட்டவும். கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவி கொதி வந்ததும் இறக்கவும். இப்போது சுவையான கத்தரிக்காய் சட்னி ரெடி.
கத்தரிக்காய் சட்னி, இட்லி- தோசைக்கு சூப்பராக இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"