பிரியாணிக்கு மட்டுமில்லை சப்பாத்தி முதல் சுடு சோறுவரை எல்லாதுக்கும் செட் ஆகும் எண்ணெய் கத்திரிக்காய் ரெசிபி.
தேவையான பொருட்கள்
5 ஸ்பூன் நல்லெண்ணை
5 கத்திரிக்காய் நறுக்கியது
கால் ஸ்பூன் மிளகு
கால் ஸ்பூன் சீரகம்
கொஞ்சம் வெந்தயம்
1 வெங்காயம்
2 தக்களி
3 பச்சை மிளகாய்
1 ½ மிளகாய் தூள்
1 ½ ஸ்பூன் மல்லி தூள்
உப்பு அரை ஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது
நெல்லிக்காய் அளவு புளி
வேர்கடலை கடலை 2 ஸ்பூன்
வெள்ளை எள்ளு 1 ஸ்பூன்
செய்முறை: எண்ணெய்யை சேர்த்து கத்திரிக்காய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து நன்றாக வதக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து எண்ணெய்யில் மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து கிளரவும். வெங்காய்ம் நறுக்கியதை சேர்த்து கிளரவும். பச்சை மிளகாய், தக்களியை சேர்க்கவும். தொடர்ந்து மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளரவும். தொடர்ந்து இஞ்சி பூண்டு – விழுதை சேர்க்கவும். தொடர்ந்து மிக்ஸியில் எள்ளு, வேர்கடலை சேர்த்து அரைத்து இதில் சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும்.