சுவையான கத்தரிக்காய் வத்தல் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கத்தரி வற்றல் – 15
பூண்டு – 20 பல்
புளி – சிறிதளவு
சாம்பார் பொடி (அ) வற்றல் குழம்பு பொடி – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – ½ ஸ்பூன்
மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 4
செய்முறை
முதலில் கத்தரி வற்றலை 10 நிமிடம் வெந்நீரில் ஊறவிட வேண்டும். பின் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவைகளை தாளித்து அதில் பூண்டையும் சேர்த்து வதக்கி, கத்தரி வற்றல், தக்காளி சேர்த்து வதக்கி புளியைக் கரைத்து விட்டு பொடி, உப்பு, சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து கெட்டியாக ஆகி வரும் போது இறக்கி விடவும். காரம் அதிகமென்றால் 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்கலாம். இந்த குழம்பை நல்லெண்ணெய் சேர்த்து சுடு சோற்றில் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“