brinji rice recipe brinji recipe in tamil : நாவில் எச்சில் ஊறவைக்கும் உணவு வகைகளுக்கும், பசிக்கும் ருசிக்கும் விருந்தே படைக்கும் உணவகங் களுக்கும் புகழ்பெற்ற நகரம் சென்னை.இங்கு நடைபெறும் திருமண விழாக்களில் கட்டாயம் பிரிஞ்சி இடம்பெறும்.
பலருக்கும் கல்யாண பிரிஞ்சி தான் ஃபேவரெட்.இதன் ருசி மனம், பலரையும் இழுக்க வைக்கும். அந்த ரகசியத்தை தான் பார்க்க போறீங்க. வீட்டிலும் செய்ய போறீங்க வாங்க.
முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காயை துருவிப் பால் எடுத்துக் கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காயவிடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அம்மியில் வைத்து பொடித்த பட்டை, கிராம்பு போட்டு பிறகு தேங்காய் பால் சேர்த்து 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
அதன் பின்னர் அரிசியை கழுவி அதில் போடவும். தீயை சிம்மில் வைத்து எரிய விடவும். அரிசி வெந்ததும் வேக வைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது qgrhy57y6r86வெஜ் பிரியாணி தயார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”