ஒருமுறை இப்படி பிரக்கோலி கபாப் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பிரக்கோலி அரை கிலோ
1 வெங்காயம்
4 பச்சை மிளகாய்
அரை துண்டு ஒஞ்சி
1 டீஸ்பூன் ஓமம்
1 டீஸ்பூன் சோம்பு
அரை கப் பன்னீர் துருவியது
1 ஸ்பூன் மிளகாய் பொடி
கொஞ்சம் சீஸ்
உப்பு
செய்முறை: பிரக்கோலியை நன்றாக அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிய அளவு எண்ணெய் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவறை நறுக்கி சேர்க்கவும். தொடர்ந்து ஓமம், சோம்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து மிளகாய் பொடி. உப்பு சேக்கவும். தொடர்ந்து பன்னீர் துவியது, சீஸ் துருவியது சேக்கவும். நன்றாக கிளரவும். அடுப்பை அணைத்து, கட்லெட் போல் தட்டி கொள்ளவும். ஒரு தவாவில் சிறிய அளவு எண்ணெய் சேர்த்து இரு பக்கம் பொன்னிறமாக பொறியும் படி செய்யவும். சுவையான கபாப் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“