ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த ப்ரோக்கோலி நூடுல்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் – 1 கப்
ப்ரோக்கோலி – 1 கப்
குடை மிளகாய் – 1 (சிறியது)
கேரட் – 1
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் நூடுல்ஸை வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ப்ரோக்கோலியையும் வேக வைத்து எடுக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அவை வதங்கியதும், நறுக்கிய குடைமிளகாய், கேரட் சேர்க்கவும். அதனுடன் வேக வைத்த ப்ரோக்கோலியையும் இப்போது சேர்க்கவும். இப்போது நூடுல்ஸ் சேர்த்து, அதனுடன் சில்லி சாஸ் மற்றும் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். அவ்வளவு தான் சுவை, ஆரோக்கியமான ப்ரோக்கோலி நூடுல்ஸ் ரெசிபி ரெடி. ப்ரோக்கோலியில் அதிக சத்துக்கள் உள்ளன. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கிறது. குழந்தைகளுக்கு கொடுத்து வர ஞாபக சக்தியினையும் இது அதிகரிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“