சுவை, ஆரோக்கியமான ப்ரோக்கோலி சூப் செய்வது குறித்து பார்ப்போம்.
நறுக்கிய ப்ரோக்கோலி - 2 கப்
ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
தண்ணீர், உப்பு, மிளகு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ப்ரோக்கோலியை சிறிதாக நறுக்கி நன்கு கழுவவும். ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளாரை எடுத்து அதனுடன் பால் சேர்க்கவும். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இப்போது அதில் ப்ரோக்கோலியைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து 2 கப் தண்ணீர் சேர்த்து, ப்ரோக்கோலி சமைத்து தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும். அடுத்து தேவையான அளவு உப்பு, மிளகு சேர்த்து சூடாக பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“