புதிய துடைப்பம் நன்றாக பெருக்கும்… இந்த டெக்னிக் யூஸ் பண்ணினால் நீண்ட நாள் உழைக்கும்!

தரமான துடைப்பங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து உழைக்கும். தரமற்ற துடைப்பங்கள் விரைவில் சேதமடைந்து, அடிக்கடி மாற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.

தரமான துடைப்பங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து உழைக்கும். தரமற்ற துடைப்பங்கள் விரைவில் சேதமடைந்து, அடிக்கடி மாற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.

author-image
WebDesk
New Update
Broom freepik

Broom maintenance

நமது அன்றாட வாழ்வில் துடைப்பம் என்பது அத்தியாவசியமான ஒன்று. ஆனால், புதிய துடைப்பம் வாங்கும் போது சில நாட்கள் மட்டுமே அதன் புதுமை நீடித்து, பின்னர் அதில் இருந்து தூசி உதிர்வது, குச்சிகள் வெளியேறுவது போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். உங்கள் புதிய துடைப்பத்தை எப்படி நீண்ட காலம் பயன்படுத்துவது என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Advertisment

புதிய துடைப்பத்தின் ஆயுளை அதிகரிக்க...

புதிய துடைப்பம் வாங்கும் போது, பணத்தைப் பற்றி கவலைப்படாமல் நல்ல தரமான துடைப்பத்தை வாங்குவது மிகவும் முக்கியம். தரமான துடைப்பங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து உழைக்கும். தரமற்ற துடைப்பங்கள் விரைவில் சேதமடைந்து, அடிக்கடி மாற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.

Advertisment
Advertisements

தூசு நீக்கும் முறை: புதிய துடைப்பத்தில் இருந்து உதிரும் தூசு ஒரு பொதுவான பிரச்சனை. இதை சரிசெய்ய, துடைப்பத்தை வாங்கிய உடனேயே, பெரிய பல் கொண்ட சீப்பால் மெதுவாக வாரி விடுங்கள். இது சுமார் 30% தூசியை நீக்கும். அடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் துடைப்பத்தை முக்கி எடுப்பதன் மூலம் சுமார் 70% தூசியை அகற்றலாம். பின்னர், துடைப்பத்தை ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைத்து, மீண்டும் ஒருமுறை சீப்பால் வாரினால், 90% தூசு நீங்கிவிடும்.

பாதுகாப்பு டிப்ஸ்: துடைப்பத்தின் குச்சிகள் பிரிந்து வராமல் இருக்க, துடைப்பத்தின் ஆரம்ப பகுதியில், சுமார் 1 இன்ச் அளவிற்கு செல்லோ டேப்பை நன்றாகச் சுற்றிக் ஒட்டி விடுங்கள். இந்த எளிய டிப்ஸ், உங்கள் துடைப்பத்தின் ஆயுளை ஒரு வருடத்திற்கும் மேலாக நீட்டிக்க உதவும்.

நினைவில் கொள்ளுங்கள்: எந்தவொரு பொருளின் ஆயுளும் நாம் அதைப் பராமரிப்பதைப் பொறுத்தது. இந்த குறிப்புகளைப் பின்பற்றி உங்கள் புது விளக்கமாறை பயன்படுத்தினால், அது உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இனி உங்கள் வீடு கூட்டும் போது தூசி தொல்லை இருக்காது என்பதை அனுபவத்தில் உணர்வீர்கள்.

 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: