சிறுநீரின் நிறம் மட்டுமல்ல, அவற்றில் குமிழ்கள் இல்லாமல் இருத்தலும் அவசியம். "சிறுநீரை நீண்ட நேரத்திற்கு அடக்கி வைத்திருக்கக் கூடாது. முடிந்த அளவு உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும். இப்படி செய்யும் போது குமிழ்கள் உருவாவது தடுக்கப்படும்" என மருத்துவர் ஷெர்லி கோஹ்வின் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Bubbles in urine: Here’s when to worry
எனினும், சிறுநீரில் குமிழ்கள் தோன்றுவதை நீங்கள் உணர்ந்தால், அதில் புரதம் இருப்பதை குறிக்கலாம். இதனால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம்.
"சிறுநீரில் எப்போதாவது குமிழ்கள் இருந்தால் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், தொடர்ச்சியாக சிறுநீரில் குமிழ்கள் தென்பட்டால் அது உடல்நலக் குறைபாட்டை உணர்த்தும்" என மருத்துவர் அசுதோஷ் பாகெல் குறிப்பிட்டுள்ளார்.
"சிறுநீர் வேகமாக வெளியேறும் போது குமிழ்கள் தோன்றலாம். ஆனால், இவை தொடர்ந்து இருக்கும் போது புரோட்டினூரியா போன்ற பிரச்சனைகள் அல்லது சிறுநீரக கோளாறு காரணமாக அதிகப்படியான புரதக் கசிவை குறிக்கலாம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் இருந்தால், சிறுநீர் சற்று கெட்டியாக வெளியேறும் போது குமிழ்கள் உருவாகலாம். "சில சமயங்களில் சிறுநீரக தொற்று ஏற்பட்டால் அதில் குமிழ்கள் வெளியேறும். வீக்கம், சோர்வு அல்லது சிறுநீரின் நிறத்தல் மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்" என மருத்துவர் அசுதோஷ் பாகெல் தெரிவித்துள்ளார்.
"வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுத்துவதன் மூலமாகவும் இதனை தடுக்க முடியும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். உணவில் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவை குறைக்க வேண்டும். சீரான உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இவற்றை பின்பற்றினால் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்" என்று மருத்துவர் அசுதோஷ் பாகெல் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.