நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய ஊதா மற்றும் வெள்ளை நிற ’பாஹி கட்டா’ ஸ்டைல் சேலை அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்தார்.
2024-2025 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கையால் நெய்யப்பட்ட ஜவுளிகள் மீதான தனது விருப்பத்திற்காக அறியப்பட்ட சீதாராமன், இந்த ஆண்டு, பழுப்பு நிற கோடுகளுடன் கூடிய வெள்ளை மற்றும் ஊதா நிற பட்டுப் புடவையை அணிந்திருந்தார். இந்த புடவை ’பாஹி கட்டா’ ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டது.
நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் 2024 மூலம், 1959-64 க்கு இடையில் நிதி அமைச்சராக தொடர்ந்து ஆறு பட்ஜெட்களை தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்வின் சாதனையை முறியடித்துள்ளார்.
சீதாராமன் தனது முதல் பட்ஜெட் கூட்டத்திற்கு, தங்க பார்டர் கொண்ட பிங்க் ( pink) மங்கல்கிரி பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுத்தார்.
2020 ஆம் ஆண்டில், சீதாராமன் நீல நிற பார்டர் கொண்ட மஞ்சள் நிற பட்டுப் புடவையை அணிந்திருந்தார், ஏனெனில் அந்த நிறம் நம்பிக்கை மற்றும் செழிப்பைக் குறிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது அவர் தனது மஞ்சள் புடவையுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
2021 பட்ஜெட்டில், நிதியமைச்சர் போச்சம்பள்ளி பட்டுப் புடவை அணிந்திருந்தார். கையால் நெய்யப்பட்ட புடவை தெலுங்கானாவில் உள்ள போச்சம்பள்ளி கிராமத்தில் இருந்து உருவானது. இது இகாட் சேலை என்றும் பிரலமாக அறியப்படுகிறது.
2022 யூனியன் பட்ஜெட்டுக்காக சீதாராமன் ஒரு பொம்காய் புடவையை அணிந்துள்ளார். பழுப்பு நிற புடவையில் தங்க நிற கோடுகள் கொண்ட பார்டர்கள் இடம்பெற்றிருந்தன. போம்காய் புடவைகள் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள போம்காய் கிராமத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன, மேலும் நூல் வேலைபாடுகள் கொண்ட புடவையின் பாடர் மற்றும் பல்லுவிற்காக பிரபலமாக உள்ளது.
2023 ஆம் ஆண்டில், சீதாராமன் கருப்பு நிற கோவில் உருவங்கள் கொண்ட சிவப்பு பட்டுப் புடவையைத் தேர்ந்தெடுத்தார். சேலையில் கர்நாடகாவின் தார்வாட் பகுதியில் இருந்து உருவான கசுட்டி எம்பிராய்டரியும் இடம்பெற்றிருந்தது.
2024 இடைக்கால பட்ஜெட்டுக்காக, நிதியமைச்சர் மேற்கு வங்கத்தின் டஸ்ஸார் பட்டுப் புடவையை காந்தா எம்பிராய்டரியுடன் அணிந்திருந்தார். மல்பெரி பட்டை விட டஸ்ஸார் பட்டு மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது மற்றும் அதன் மந்தமான, தங்க பளபளப்பிற்கு பெயர் பெற்றது. மேலும் இந்த கிஷ்ணரின் நீல வண்ணத்தை குறிப்பதாக இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.