பள்ளிப்பாடங்களில் ‘தமிழகத்தை ஆண்டவர்கள் சேர, சோழ, பாண்டியர்’ என்று படித்தோம். அதில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழர்கள், தென்னகத்தின் முக்கிய அரசர்களாக கருதப்பட்டனர். அவர்களின் ஆட்சியில் கட்டப்பட்ட கோயில்கள், அரண்மனை, அழகிய கட்டிடக்கலை அதன் கலாச்சாரச் சிறப்பாகும். இன்று சிதலமடைந்தாலும், சில சோழர் நினைவுகள் தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்னும் மிஞ்சி நிற்கின்றன எனலாம்.
அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சோழர் மரபையும் கட்டடக்கலையையும் தேடி மக்கள் ஆர்வமுடன் வரலாற்றுப் பயணங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பார்வையாளர்கள் வருகின்றனர். ஒவ்வொரு இடத்தையும் தனியாகத் தேடி, திட்டமிட்டு செல்கிறது சிரமமாகத் தோன்றுகிறதா?
தஞ்சாவூர் சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் கொண்டுவந்துள்ளது. குறைந்த செலவில், ஒரே கட்டமைப்பில் பல முக்கிய இடங்களை பார்வையிடும் வாய்ப்பை இது வழங்குகிறது. ஜூலை 6 ஒரே நாளில் தஞ்சாவூர் முழுவதுமுள்ள சோழர்களின் முக்கியமான கட்டடக்கலை அமைப்புகளை சுற்றி பார்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த முழு விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
'கிரேட் சோழா சர்க்யூட் டூர்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சுற்றுலா பேக்கேஜ், காலை 7 முதல் இரவு 7 மணி வரை உங்களை தஞ்சையை சுற்றி காட்டக்கூடிய ட்ரிப் ஆகும். குறைந்த விலையில் மக்கள் சோழ வம்சத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள பெரும் வாய்ப்பாக இது அமையும்.
என்னென்ன இடங்களை பார்க்கலாம்?
தஞ்சாவூர் பெரிய கோவில், திருப்பழனம், திருவைகாவூர், திரு புறம்பியம், சுவாமிமலை, திருவரஞ்சுழி, தாராசுரம், சோழன் மாளிகை, பட்டீஸ்வரம், பழையறை, உடையலூர், புள்ளமங்கை ஆகிய இடங்களை சுற்றி பார்க்கலாம். ஜூலை 6, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை இந்த பயணம் தொடங்குகிறது.
எவ்வளவு செலவாகும்?
ஒரு நபருக்கு 1,500 ரூபாய் மட்டுமே ஆகும். ஏசி பேருந்தில் போக்குவரத்து காலை உணவு மதிய உணவு மற்றும் சுற்றுலா பயணம் முழுவதும் உங்களை வழிநடத்தும் வழிகாட்டி ஆகிய அனைத்து வசதிகளும் சேர்த்து இந்த தொகை வசூலிக்கப்படுகிறது. நீங்களும் சோழ அரசர்களின் கட்டிடக்கலையை பார்த்து ரசிக்க விரும்பினால் 9889129765 என்றால் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் புக்கிங்கை பதிவு செய்து கொள்ளலாம் அல்லது
https://thanjavurtourism.org/registration/ என்ற அதிகாரப்பூர்வை இணையதளத்தில் உங்கள் முன்பதிவை செய்யலாம்.