பட்ஜெட்டில் பயணம் செய்ய விரும்பும் நபராக நீங்கள் இருந்தால், இந்தியாவில் பார்க்க மலிவான இடங்கள் ஏராளம். இந்த இடங்களை நீங்கள் முன்கூட்டியே திட்டமிடாத நிலையிலும் குறைந்த அளவான பட்ஜெட்டில் பார்த்து வரலாம். அந்த வகையில், நீங்கள் பயணிக்கக்கூடிய இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Advertisment
கசோல்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் பார்வதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இதன் அழகிய இயற்கை அழகு, கம்பீரமான பனி மூடிய மலைகள், பனிமூட்டமான காலை, பைன் மரங்கள், பார்வதி நதியின் சலசலப்பு சுற்றுலா பயணிகளை வித்தியாசமான அனுபவத்துக்கு கொண்டு செல்லும்.
ஆலப்புழா
ஆழப்புழா, கேரளம்
கேரளத்தின் ஆலப்புழா புதுமண தம்பதியருக்கு ஏற்ற சுற்றுலா தலம். இங்குள்ள படகுகளில் பயணம் செய்வது புதிய அனுபவமாக இருக்கும். மேலும் இங்குள்ள உணவும் தென் இந்திய உணவுகளில் புகழ் பெற்றதாகும்.
புஷ்கர்
புஷ்கர், ராஜஸ்தான்
இந்தியாவின் பழைமையான கலாசார நகரங்களில் இதுவும் ஒன்றாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இங்கு பிரமிக்க வைக்கும் பால்-நீலக் கோயில் உள்ளது. மேலும் உலகப் புகழ்பெற்ற ஒட்டக கண்காட்சி, 52 குளியல் கட்டங்களைக் கொண்ட புனித ஏரி என கண்ணுக்கு விருந்தளிக்கும் பல இடங்கள் உள்ளன.
பாண்டிச்சேரி
பாண்டிச்சேரி, புதுச்சேரி
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இந்த சிறிய நகரம் பாண்டி அல்லது புதுச்சேரி என அழைக்கப்படுகிறது. இது புனிதம் மற்றும் அமைதியைத் தேடும் பயணிகளுக்கு மலிவான இடமாகும். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்ரீ அரவிந்தோ ஆசிரமம் மற்றும் அதன் பகுதியான ஆரோவில் நகருக்கு வடக்கே அமைந்துள்ளது. இங்கு பிரஞ்சு உணவுகளும் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/