ரவை வைத்து சுவை, ஆரோக்கியமான பன் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
புளித்த தயிர் - 1/4 கப்
இஞ்சி துண்டு - 1
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
பேக்கிங் சோடா - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போடவும்.
இப்போது நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். அடுத்ததாக மிக்ஸி ஜாரில் ரவையை போட்டு அதனுடன் பச்சரிசி மாவு, கொஞ்சம் புளித்த தயிர் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு அந்த மாவில் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து கரைத்து ஏற்கனவே தாளித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும்.
20 நிமிடம் அப்படியே வைக்கவும். இதனால் ரவை நன்றாக ஊறி வரும். பின்னர் எடுத்து இரண்டு சிட்டிகை பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கவும். இப்போது குழியான தாளிப்பு கடாய் அல்லது ஆப்ப கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய தடவி சூடானதும் குறைந்த தீயில் வைத்து மாவை மாவை ஊற்றி கடாயை மூடி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் சுவையான மெது மெதுப்பான பன் தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“