4 Helpful Ways to Lose Weight through Peanut Butter: வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். குறிப்பாக உடல் எடை, தொப்பை குறைக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு ஆகச் சிறந்தது. மாவுச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது.
Lose Weight through Peanut Butter: பீனட் பட்டர் பயன்கள்
இதிலிருந்து செய்யப்பட்ட பீநட் பட்டர் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. புரோட்டின், நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு, பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடண்ட், மெக்னீசியம் நிறைந்துள்ளது. விட்டமின் ஏ டி பி12 போன்ற சத்துக்கள் உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
பீநட் பட்டர் நன்மைகள்:-
- பீநட் பட்டரில் நிறைவுற்ற கொழுப்பு இதயப்பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
- இதில் அளவுக்கதிகமான பொட்டாசியம் நிறைந்திருப்பதால், உடலில் ஏற்படும் சோடியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
- விட்டமின் ஏ டி பி12, கார்போஹைட்ரேட், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- பீநட் பட்டர் கொழுப்பு நிறைந்தது என்ற கருத்து உள்ளது, ஆனால் இவற்றில் நிறைவுறாத கொழுப்புகளை (unsaturated fat) விட நிறைவுற்ற கொழுப்புகளே (saturated Fat) அதிகம்.
- 2 டேபுள் ஸ்பூன் பீநட் பட்டரில் 7 கிராம் புரோட்டின் உள்ளது, இதனை சாப்பிடுவதன் மூலம் தசைகளின் வளர்ச்சி மேம்படும்.
பீனட் பட்டர் செய்முறை :
பீனட் பட்டர் கடைகளில் வாங்க முடியவில்லை என்றாலோ அல்லது விலை அதிகமாக உள்ளது என்றாலோ மிகவும் எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.
பீநட் பட்டர் / வேர்க்கடலை பட்டர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Peanut Butter in Tamil )
- வேர்க்கடலை - 1 கப்( வறுத்து தோல் நீக்கியது )
- பொடித்த வெல்லம் - 3 தேக்கரண்டி
- தேன் - 1 தேக்கரண்டி
- வெஜிடபிள் ஆயில் - 3 தேக்கரண்டி
- உப்பு - சிறிதளவு
செய்முறை
- முதலில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்சியில் சேர்த்து அரைக்கவும்.
- வேர்க்கடலை நன்கு பவுடராக வந்ததும் அதனுடன் பொடித்த வெல்லம் 3 தேக்கரண்டியை சேர்த்து அரைக்கவும்.
- பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி தேனை சேர்த்து அரைக்கவும்.
- இப்பொழுது 3 தேக்கரண்டி வெஜிடபிள் ஆயில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைக்கவும் .
- சுவையான எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய பீநட் பட்டர் தயார்.
- பிரட் , சப்பாத்தியில் பீநட் பட்டரை தடவி பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.