சுவைக்கு மட்டுமல்ல தொப்பையை வேகமாக குறைக்கவும் உதவும் பீனட் பட்டர்…

How to Lose Belly Fat with Peanut Butter: பீனட் பட்டர் தொப்பையை குறைக்க உதவும்

By: January 15, 2019, 7:49:04 PM

4 Helpful Ways to Lose Weight through Peanut Butter: வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். குறிப்பாக உடல் எடை, தொப்பை குறைக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு ஆகச் சிறந்தது. மாவுச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது.

Lose Weight through Peanut Butter: பீனட் பட்டர் பயன்கள்

இதிலிருந்து செய்யப்பட்ட பீநட் பட்டர் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. புரோட்டின், நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு, பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடண்ட், மெக்னீசியம் நிறைந்துள்ளது. விட்டமின் ஏ டி பி12 போன்ற சத்துக்கள் உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

பீநட் பட்டர் நன்மைகள்:-

 • பீநட் பட்டரில் நிறைவுற்ற கொழுப்பு இதயப்பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
 • இதில் அளவுக்கதிகமான பொட்டாசியம் நிறைந்திருப்பதால், உடலில் ஏற்படும் சோடியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
 • விட்டமின் ஏ டி பி12, கார்போஹைட்ரேட், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
 • பீநட் பட்டர் கொழுப்பு நிறைந்தது என்ற கருத்து உள்ளது, ஆனால் இவற்றில் நிறைவுறாத கொழுப்புகளை (unsaturated fat) விட நிறைவுற்ற கொழுப்புகளே (saturated Fat) அதிகம்.
 • 2 டேபுள் ஸ்பூன் பீநட் பட்டரில் 7 கிராம் புரோட்டின் உள்ளது, இதனை சாப்பிடுவதன் மூலம் தசைகளின் வளர்ச்சி மேம்படும்.

பீனட் பட்டர் செய்முறை :

பீனட் பட்டர் கடைகளில் வாங்க முடியவில்லை என்றாலோ அல்லது விலை அதிகமாக உள்ளது என்றாலோ மிகவும் எளிமையாக வீட்டிலேயே செய்யலாம்.

பீநட் பட்டர் / வேர்க்கடலை பட்டர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Peanut Butter in Tamil )

 • வேர்க்கடலை – 1 கப்( வறுத்து தோல் நீக்கியது )
 • பொடித்த வெல்லம் – 3 தேக்கரண்டி
 • தேன் – 1 தேக்கரண்டி
 • வெஜிடபிள் ஆயில் – 3 தேக்கரண்டி
 • உப்பு – சிறிதளவு

செய்முறை

 • முதலில் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்சியில் சேர்த்து அரைக்கவும்.
 • வேர்க்கடலை நன்கு பவுடராக வந்ததும் அதனுடன் பொடித்த வெல்லம் 3 தேக்கரண்டியை சேர்த்து அரைக்கவும்.
 • பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி தேனை சேர்த்து அரைக்கவும்.
 • இப்பொழுது 3 தேக்கரண்டி வெஜிடபிள் ஆயில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைக்கவும் .
 • சுவையான எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய பீநட் பட்டர் தயார்.
 • பிரட் , சப்பாத்தியில் பீநட் பட்டரை தடவி பரிமாறவும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Burn belly fat with peanut butter

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X