/indian-express-tamil/media/media_files/2025/09/05/businessman-donates-rs-1-11-crore-to-tirumala-tirupati-devasthanams-tamil-news-2025-09-05-16-31-48.jpg)
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொழிலதிபர் ஒருவர் ரூ.111 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
உலகின் பணக்கார கடவுளாக திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையான் இருக்கிறார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோடிக்கணக்கில் நன்கொடை கொட்டப்பட்டு வருகிறது. பணமாகவும், நகை உள்ளிட்ட ஆபரணங்களாகவும் நன்கொடை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொழிலதிபர் ஒருவர் ரூ.1.11 கோடி நன்கொடை அளித்திருக்கிறார். தொழிலதிபர் பி.ரவிக்குமார் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடுவிடம் காசோலை மூலமாக அந்தத் தொகையை வழங்கி இருக்கிறார். மேலும் அவர் அந்தத் தொகையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி (ஸ்ரீ வெங்கடேஸ்வர) பிராணதான அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
எஸ்.வி பிராணதான அறக்கட்டளை இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கி வருகிறது. குறிப்பாக இதயம், மூளை, புற்றுநோய் மற்றும் பிற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறது. மேலும் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு, ஹீமோபிலியா, தலசீமியா மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சைக்கான ஆராய்ச்சியை அறக்கட்டளை ஊக்குவிக்கிறது. தொழிலதிபர் பி.ரவிக்குமார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.